Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களை அறிவித்தது தென்மண்டல வானிலை ஆய்வு மையம்

 வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில், நேற்று இரவிலிருந்தே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான இடி, மின்னலுடன் கூடிய கனமழை செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ,வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



மேலும் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது எனவும், லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தேனி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களை அறிவித்தது தென்மண்டல வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களை அறிவித்தது தென்மண்டல வானிலை ஆய்வு மையம் Reviewed by Rajarajan on 15.10.24 Rating: 5

கருத்துகள் இல்லை