Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த ஒரு பகுப்பாய்வு



தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இன்று (மே 8, 2026) காலை 9.30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு (HSC +2) பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in அல்லது dge.tn.gov.in மூலம் தங்களது மதிப்பெண்களைப் பெறலாம். 

இந்த ஆண்டு தேர்வை பொறுத்தவரையில், மொத்தமாக 7.91 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 4.18 லட்சம் மாணவிகள், 3.72 லட்சம் மாணவர்கள் ஆவார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தமாக மாணவிகள் 97% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.19% தேர்ச்சி அடைந்துள்ளனர்.மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தற்காலிகமாக பதிவிறக்கம் செய்து, கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட செயல்களில் பயன்படுத்தலாம். அசல் சான்றிதழ்கள் பின்னர் பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்! மேலும், மதிப்பெண்களில் சந்தேகம் உள்ளவர்கள் மறுமதிப்பீடு அல்லது துணைத் தேர்வு குறித்து பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசிக்கலாம்.


பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு 👇👇👇


+2 public exam Complete result analysis 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த ஒரு பகுப்பாய்வு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த ஒரு பகுப்பாய்வு Reviewed by Rajarajan on 8.5.26 Rating: 5

கருத்துகள் இல்லை