Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளியில் பணியில் இருந்த பெண் முதுகலை ஆசிரியைக்கு கொடூர தாக்குதல் | DRPGTA கடும் கண்டனம் | பணிப் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக இயற்ற கோரிக்கை


🔴 அரசு பள்ளியில் பணியில் இருந்த பெண் முதுகலை ஆசிரியைக்கு கொடூர தாக்குதல் | DRPGTA கடும் கண்டனம் | Tondi School 


இராமநாதபுரம் மாவட்டம்,

தொண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்பணியில் இருந்த முதுகலை ஆங்கில பெண் ஆசிரியையை வெளிநபர்கள் பள்ளிக்குள் புகுந்து தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் (DRPGTA) கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது.


📅 10.12.2025அன்று

அரையாண்டுத் தேர்வுக்கான பாடம் கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியைக்கு மாணவியின் தாயும் பாட்டியும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, அடித்து, தள்ளி, இரும்பு கதவில் மோதி கொடூரமாக தாக்கியுள்ளனர்.


 பள்ளி வளாகத்தில்,மாணவிகள் முன்னிலையில், ஒரு பெண் ஆசிரியைக்கு நடந்த இந்த தாக்குதல்

தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.


📢 தமிழ்நாடு அரசே! பள்ளிக்கல்வித் துறையே!


ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும்

பள்ளிக்குள் புகுந்து தாக்கிய வெளிநபர்களைஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளில் கைது செய்ய வேண்டும்.


👩‍🏫 மாணவர்களின் எதிர்காலம் சிறக்க சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் ஆசிரியர்களின் குரல்இனி மௌனமாக விடப்படக் கூடாது!


✊ ஆசிரியர் பாதுகாப்பு – நமது உரிமை!


DRPGTA கடும் கண்டனம்


தாக்குதலுக்கு உள்ளான பெண் ஆசிரியரின் குரல் பதிவு 

Click Here


அரசு பள்ளியில் பணியில் இருந்த பெண் முதுகலை ஆசிரியைக்கு கொடூர தாக்குதல் | DRPGTA கடும் கண்டனம் | பணிப் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக இயற்ற கோரிக்கை அரசு பள்ளியில் பணியில் இருந்த பெண் முதுகலை ஆசிரியைக்கு கொடூர தாக்குதல் | DRPGTA கடும் கண்டனம் | பணிப் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக இயற்ற கோரிக்கை Reviewed by Rajarajan on 17.12.25 Rating: 5

கருத்துகள் இல்லை