Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

2021 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது? தேர்வுத்துறை விளக்கம்!

10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, நடப்பு கல்வியாண்டில் ( 2020-2021 ) 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜூனில் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, தேர்வுத்துறை அரசிடம் சமர்ப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன்தான் அது தொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

2021 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது? தேர்வுத்துறை விளக்கம்! 2021 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது? தேர்வுத்துறை விளக்கம்! Reviewed by Rajarajan on 16.11.20 Rating: 5

கருத்துகள் இல்லை