Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பணி மாறுதல் தொடர்பான வழிகாட்டி – ஆசிரியர்களுக்கான முக்கிய நடைமுறைகள்

 


📝 பணி மாறுதல் தொடர்பான வழிகாட்டி – ஆசிரியர்களுக்கான முக்கிய நடைமுறைகள்

🔔 பணி மாறுதல் காலம் வந்துவிட்டது! தற்போது தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், BT surplus என பலரும் IN & OUT ஆகும் சூழ்நிலை...

இங்கே, மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய பொதுவான நடைமுறைகள் விளக்கமாக:


1. பணி மாறுதல் ஆணை பெறுதல்

முதற்கட்டமாக மாற்றல் ஆணையை பெற்றதும்:

2. பழைய பள்ளியில் பணி விடுப்பு (Relieving)

  • பழைய பள்ளியில் அதிகாரப்பூர்வமாக பணியை விட்டுப் பெறுதல்.

3. புதிய பள்ளியில் பணி ஏற்பு (Joining)

  • புதிய பள்ளியில் பணி ஏற்பதற்கான அறிவிப்பு (Joining Report) தயார் செய்ய வேண்டும்.

🟡 குறிப்பு:
பணி ஏற்பு அறிக்கை கிடைக்கப்பெறும் வரை LPC/SR அனுப்பக்கூடாது.
(சிலர் Relieving Order-இற்கு உடனே SR, LPC கொடுத்து விடுகின்றனர் – இது தவறு.)


4. LPC அனுப்புதல்

  • இரு அசல் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.

5. SR அனுப்புதல்

  • Covering Letter உடன்

  • Register Post மூலமாக அல்லது நேரடியாக கையில் கொடுக்கும் போது SR Register-இல் கையெழுத்து வாங்கிக்கொண்டு தர வேண்டும்.


6. SR Received உறுதிப்படுத்தல்

  • SR பெற்றதும், பெற்றதற்கான ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட வேண்டும்.
    (பல பள்ளிகளில் இது தவிர்க்கப்படுகிறது – தவறு.)


7. ஊதிய உயர்வு (Increment – July)

  • ஜூலை மாதம் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கும் மாதம்.

  • மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு 01.07.2025 தேதியில் ஊதிய உயர்வு வழங்கி, அதற்கான SR Entry போட்டு அனுப்பலாம்.

  • மாறுதல் தேதி கடந்த பிறகு SR Entry போடக்கூடாது.

🔹 ஏன் இவ்வாறு?
புதிய பள்ளியில் அவர் ஊதிய உயர்வை பெற்றுக்கொள்ளலாம் — எந்த பிரச்சனையும் இருக்காது.


📌 EMIS மற்றும் IFHRMS மாற்றம் – முக்கியக் குறிப்புகள்

🖥️ EMIS Transfer:

  • Request: தனிநபர் ID மூலமாக

  • Approval: மாவட்ட EMIS DC

🧾 IFHRMS Transfer:

  • ஆசிரியர் Initiator / Verifier / Approver என இருந்தால்,

    மாறுவதற்கு முன் ifhrm ல்  (roll) மாற்றப்பட்டு, பிறகு பணி மாறுதல் செய்ய வேண்டும்.

புதிய பணியிடத்தில் 3-4 நாட்கள் பணியாற்றினாலும்

  • சம்பளம் போட முடியாது / கூடாது

  • பழைய பள்ளியின் சம்பளம் மட்டும் போட IFHRMS இல் வசதி இல்லை.

புதிய பள்ளியில் ஜூலை மாத சம்பளம்:

  • 1–31 தேதிகளுக்கான முழு சம்பளமும் புதிய பள்ளியிலேயே பெறலாம். இல்லை எனில் 

  • IFHRMS இல் இது Split Pay ஆகவே வரும்:

நாள் பணியிடம் சம்பளம்
1–4      பழைய பள்ளி      Old Station Pay
5–31      புதிய பள்ளி      New Station Pay



🙏 Thanks To 

க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி,
மோ. சுப்புலாபுரம், மதுரை மாவட்டம்.



🖇️ இந்த பதிவை உங்கள் சக ஆசிரியர்களுடன் பகிருங்கள் – பணி மாறுதல் குழப்பங்களைத் தவிர்க்க!



பணி மாறுதல் தொடர்பான வழிகாட்டி – ஆசிரியர்களுக்கான முக்கிய நடைமுறைகள் பணி மாறுதல் தொடர்பான வழிகாட்டி – ஆசிரியர்களுக்கான முக்கிய நடைமுறைகள் Reviewed by Rajarajan on 6.7.25 Rating: 5

கருத்துகள் இல்லை