ஈட்டிய விடுப்பு (EL) ஒப்படைப்பு செய்வதால் ஏற்படும் வருமானத்திற்கு வரி கணக்கீடு செய்வதற்கான எளிய கால்குலேட்டர்
ஈட்டிய விடுப்பு (EL) ஒப்படைப்பு செய்யும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்!
👉 உதாரணக் கணக்கீடு (2025–2026 நிதியாண்டு)
ஒரு இடைநிலை ஆசிரியர்
-
அடிப்படை ஊதியம்: ₹61,700/-
-
ஆண்டு முழுவதும் கிடைக்கும் மொத்த வருமானம் (Gross Income): தோராயமாக ₹12,28,638/-
இந்த வருமானம் ₹12,75,000/- க்குள் இருப்பதால்,
👉 வருமான வரி செலுத்த தேவையில்லை.
⚠️ ஆனால்…
அதே ஆசிரியர் 01/10/2025 அன்று EL Surrender (ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு) செய்ய விண்ணப்பித்தால்,
-
Surrender Amount: ₹50,343/-
அதனால் அவரது மொத்த வருமானம் (Gross Income)
👉 ₹12,78,981/- ஆக உயரும்.
வருமான வரி கணக்கீடு (2025–2026)
வருமான வரம்பு | வரி வீதம் | வரி தொகை |
---|---|---|
0 – 4 லட்சம் | 0% | Nil |
4 – 8 லட்சம் | 5% | ₹20,000 |
8 – 12 லட்சம் | 10% | ₹40,000 |
12 லட்சம் மேல் | 15% | ₹597 |
மொத்த வரி = ₹60,597/-
💡 முக்கிய குறிப்பு:
➡️ EL Surrender செய்யாமல் இருந்தால் Income Tax இல்லை.
➡️ EL Surrender செய்தால் பெறும் தொகையை விட அதிகமான வரி செலுத்த வேண்டி வரும்.
பரிந்துரை:
2025–2026 நிதியாண்டில் உங்கள் மொத்த வருமானம் ₹12 லட்சம் முதல் ₹12,75,000 வரை இருக்கும் நிலையில், வருமான வரியில் இருந்து விலக்கு பெற வாய்ப்பு இருக்கலாம்.
➡️ 01/10/2025 அல்லது 31/03/2026 க்கு முன் EL Surrender செய்ய நினைத்தால்,
👉 “With EL Surrender” மற்றும் “Without EL Surrender” என இரு நிலைகளிலும் வருமான வரி கணக்கீடு செய்து பார்த்து முடிவு செய்யவும்.
கருத்துகள் இல்லை