Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாய வலையில் சிக்குண்டு கிடக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


மாய வலையில் சிக்குண்டு கிடக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். இப்பதிவு யாரையும் குறைகூற வேண்டும் என்பதற்கான பதிவு அல்ல. பல நாட்களாக எங்கள் மனதை உலுக்கிவரும் விஷயங்கள் ... இதோ உங்கள் மனச்சாட்சியோடு..!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



 23 .3. 2023 அன்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கு உரியது. பட்டதாரி பணி நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியராகச் சென்று பணிபுரிந்து கொண்டிருக்க கூடியவர்கள் இப்பணிக்கான முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவது செல்லாது; ஏனென்றால் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான ஊட்டு பதவியில் முதுகலை ஆசிரியர் பணியிடம் சேர்க்கப்படவில்லை ஆகவே அவர்கள் அப்பதவிக்கு வருவது சரியாக இருக்காது என்ற அடிப்படையில் அத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் பட்டதாரி ஆசிரியர்களின் பணி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் நடைமுறை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

 இது பட்டதாரி ஆசிரியர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

 காரணம் சுமார் 60,000 - க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் இவர்களின் பதவி உயர்விற்கு உரிய பணியிடம்.

முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வில் சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் மீளவும் அவர்களின் பட்டதாரி பணி முன்னுரிமையைப் பயன்படுத்தி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிமாறுதலில் வருவதால் தங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் போகின்றது என்பது இவர்களின் வாதமாக உள்ளது.

 ஆனால் இந்த வாதம் சரியானதுதானா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


 ஒரு பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று மீண்டும் தலைமை ஆசிரியராக பணிமாறுதல் பெற்று வருவதனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு உண்மையிலேயே தடுக்கப்படுகிறதா? இங்கேதான் பதவி உயர்வில் சென்றவர்கள் முதுகலை ஆசிரியர்களாகவே பணியாற்றினால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக இருக்கக்கூடியவர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது அல்லது நம்ப வைக்கப்படுகிறது.

 அவர்கள் நம்பிக்கை சரியானதுதான் என்று நினைக்கத் தோன்றினாலும் பாதிக்கப்படப் போவது பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர் பேரினமே.


எப்படி எனில்...

1) ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 1000 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஏற்படும் போது அதில் 500 பணியிடம் பட்டதாரி பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் (50%) நிரப்பப்பட வேண்டும்.


2) அது போல உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தில் 500 காலிப்பணியிடம் வருகிறது என்றால் 500 இடங்களுமே பட்டதாரி பணிநிலை முன்னுரிமைப்படி நிரப்பப்பட வேண்டும். 


3) மேலும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்குத் தயாரிக்கப்படும் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் 7:2 வீதம் உயர்நிலைப்பள்ளியில் இருந்து 100 தலைமை ஆசிரியர்களாவது பதவி உயர்வைப் பெறுகின்றனர் .


4) ஆக மொத்தம் பட்டதாரி நிலையில் இருந்து ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் 1100 பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழிவகை உள்ளது.

 ஆனால் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்லும் பட்டதாரி ஆசிரியருக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் இல்லை என்ற நிலை உருவாகும் போது மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும். 500 பேருக்கு குறைந்தபட்சம் 300 நபர்களாவது விருப்பம் இன்மையைத் தெரிவிக்கும் நிலை ஏற்படும் .மேலும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (7:2 வீதம்) செல்லக்கூடிய நிலையும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வரலாம். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 700 பேர் மட்டுமே பதவி உயர்வில் செல்லக்கூடிய நிலை வரும் .

ஆண்டுக்கு 1100பேர் பதவி உயர்வில் செல்வது பட்டதாரி ஆசிரியர்களுக்கு நல்லதா ?அல்லது ஆண்டுக்கு 700 பேர் பதவி உயர்வில் செல்வது நல்லதா? என்பதை பட்டதாரி நிலையில் உள்ள ஆசிரியர்களும், சங்கங்களும் எண்ணிப் பார்க்க வேண்டும் . அதை எல்லாம் எண்ணிப் பார்க்கக் கூடிய நிலையில் இன்று அவர்கள் இல்லை.


 2007 ஆம் ஆண்டிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் பட்டதாரி நிலையிலேயே ஓய்வு பெறக்கூடிய நிலை இன்று உள்ளது(1.6.2006 இல் பணிவரன் முறை செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கையின்

படி) அவர்கள் விருப்பப்பட்டால் முதுகலை ஆசிரியர்களாகச் சென்று பணி செய்யக்கூடிய நிலை& வாய்ப்பு உள்ளது.


ஆனால் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியானது தமக்கு கிடைத்துவிடும் என்று பல ஆண்டுகாலம் காத்திருந்தால் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலை உருவாகும். ஆண்டிற்கு சுமார்100 முதல் 200 இடங்கள் மட்டுமே உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் காலியிடம் ஏற்படும். 


 எப்போதுமே ஒரு பணியிடத்தின் முன்னுரிமையில் இருந்தே பதவி உயர்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால்  

 இங்கே பணியிடத்திற்கான பதவி உயர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாகவும் மறைமுகமாகவும் குறைக்கப்பட்டு வருவது பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு நடந்து வருகிறது. இந்த உண்மையை & எதார்த்தத்தை பட்டதாரி ஆசிரியர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

  தற்போது இருந்து வந்த நடைமுறையால் யாருக்கும் மிகப்பெரிய பாதிப்பு என்பது இல்லை. ஒரே பணி நிலையில் ஒரு ஆசிரியர் பணி ஓய்வு பெறுவது என்பதும் சரியானது அல்ல .

குறைந்தபட்சம் இரண்டு பதவி உயர்வுகளை ஒரு ஆசிரியர் பெற்று பணி ஓய்வு பெற்றால் அது சிறப்பானதாக இருக்கும். பட்டதாரி ஆசிரியர் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு பட்டதாரிகளின் பதவி உயர்வினைத் தடுக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் நுண்அரசியலை பட்டதாரி ஆசிரியர்களும் நம்புவது வேதனையானதும் ,

வேடிக்கையானதும் ,

கூட. காரணம் பட்டதாரி நிலையிலேயே பணி புரியக்கூடிய ஒரு ஆசிரியர் தனக்கு இருக்கக்கூடிய உயர் கல்விக்கான தகுதியினைப் பெற்று முதுகலை ஆசிரியராகப் பணிபுரிகின்றார்.

 அது அவருடைய விருப்பம். விருப்பமில்லாத ஆசிரியர் பட்டதாரி நிலையிலேயே பணிபுரிகின்றார்.

 இதில் எவர் மூத்தவரோ அவரே உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு இன்றுவரை பரிந்துரை செய்யப்படுகிறார். எனவே இளையவர் எந்த வகையிலும் உயர்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியராக வருவது என்பது இதுவரை இல்லை.

 பணியில் மூத்தவர் மட்டுமே அந்தப் பதவியினை அலங்கரிக்கின்றார். அவர் பெற்றிருக்கக் கூடிய கல்வித் தகுதி அவரை முதுகலை ஆசிரியராக பணிபுரிவதற்கு அனுமதிக்கின்றது. ஆனால் அவர்கள் அங்கும் சென்று விட்டு இங்கும் வருவது என்பது ஏற்புடையதா ? நியாயமானதா ? 

எனக் கேட்டால்... பதவி உயர்வில் முதுகலை ஆசிரியராகச் சென்று பணியாற்றி கொண்டிருக்க கூடியவர்களில் விருப்பப்பட்டவர்கள் மட்டுமே உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணிமாறுதலில் மீண்டும் வருகிறார்கள். விருப்பம் இல்லாதவர்கள் அதே நிலையிலேயே தொடர்கிறார்கள்.

 இவை அனைத்துமே பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான உரிமைகள் .இவை அனைத்தும் நம் முன்னோர்கள் நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த நியாயமான உரிமைகள். மேல்நிலைக் கல்வியை உருவாக்கும் போது முதுகலை ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை.ஆகவே மேல்நிலைக் கல்வி வகுப்பிற்குச் சென்று நாங்கள் கற்றுத் தருகிறோம் அதே சமயத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை நாங்கள் இழக்கும் சூழ்நிலை என்பது வரக்கூடாது என்று முன்னோர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் இவை.

இவை தற்போது சிலரின் சுயநலத்தால் பறிபோகின்றது என்பது வேதனைக்குரியது. இதே நிலை நீடித்தால் தேர்வுநிலை, சிறப்பு நிலையும் கூட பறிபோகும். பதவி உயர்வு துறப்பு செய்வோற்கு எதற்கு தேர்வநிலை, சிறப்பு நிலை என்ற நிலை கூட வரலாம். போராடி பெற்ற உரிமைகள் என்றும் பறிபோகக் கூடாது.


உங்கள் மனச்சாட்சியோடு பேசுகிறேன்.


கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை இருப்பின் தெரிவியுங்கள்.


🌹5 ஆண்டுகள் ஒரு பணியில் பணி முடித்த தலைமை ஆசிரியர்களை அப்பணியில் இருந்து மீண்டும் முதுகலை ஆசிரியர்களாக பணியிறக்கம் செய்வது நியாயமா? 


💐ஒருவர் பணியிறக்கம் செய்யப்பட்டால் ஒன்று அவர் அப்ப ணியிடத்தில் தவறு செய்திருக்க வேண்டும். தவறு செய்யாத ஒருவரை பணியிடத்திலிருந்து பணியிறக்கம் செய்யலாமா?


🙏இப்படி இறக்கம் செய்வது கூடாது என்று எந்த ஒரு சங்கமும் ஏன் இதுவரை யாரிடமும் முறையிடவில்லை. இன்று உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு காலத்தில் மாவட்டப் பொறுப்பாளர்களாகவும்,வட்டப் பொறுப்பாளர்களுமாக இருந்து இயக்கத்தினுடைய வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள். இயக்கத்தினை வளர்ப்பதில் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள் . இன்றைய நிலையில் அவர்கள் மனம் துடிக்கும் போது அவர்களை தாயுள்ளத்துடன் தாங்கிப் பிடிக்க வேண்டிய மனநிலை தாய்ச் சங்கங்களிடம் இல்லாது போனது ஏன் ?


🌷 மேனாள் சங்க உறுப்பினர் என்ற முறையில் எண்ணிப் பார்க்கத் தேவையில்லை. மனச்சாட்சிப்படியாவது பதவி இறக்கம் என்பது சரிதானா என எண்ணிப் பார்க்க வேண்டாமா? இதில் தலையிட சங்கங்களுக்கு ஏன் மனது வரவில்லை .நாங்கள் அந்தச் சங்கத்திற்கு உழைக்கவில்லையா ?



🌺2009 ஆம் ஆண்டும் 2013 ஆம் ஆண்டும் அரசு விருப்பக் கடிதம் கேட்ட போது அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்று தடையாணை வாங்கி,

 எப்போதும் போல் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று சங்கங்கள் போராடின .

அன்று போராடியதின் விளைவாக விருப்பம் கேட்கும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.ஆகவே நமக்குத் துணையாக நமது சங்கங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கையுடன் சங்கங்களை நம்பி வந்ததன் விளைவால் இன்று ஒருகூட்டம் பாதிக்கப்பட்டு நிற்கிறது.

 ஆனால் தாய்ச்சங்கங்கள் அவர்களைத் தத்தளிக்க விட்டு..தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. ஒருவேளை அன்று விருப்பக் கடிதம் கொடுக்கும் நடைமுறையில் சங்கங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் நாங்களும் ஒரு முடிவை எடுத்து மனநிறைவோடு பணிசெய்து கொண்டிருப்போம்.

அன்று எங்களுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கிவிட்டு இன்று எங்களைப் புறம் தள்ளுவது நியாமான முடிவா?


🌹பட்டதாரி நிலையிலிருந்து தனிச்சங்கம் கண்டது நாங்கள் செய்த தவறா?

 நாங்கள் உறுப்பினர் சந்தா வழங்கவில்லை என்பதற்காக தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமா? என்பதும் தெரியவில்லை .எங்களைப் புறம் தள்ளியது நீங்கள் தானே? அதன்பின் தானே எங்களின் உரிமையைப் பெற தனிச்சங்கம் கண்டோம் .ஆனால் தாய்ச்சங்கம் என்று சொல்லிக் கொள்ளும் சங்கங்கள் எல்லாம் தாய்மையை மறந்து தள்ளிவிட நினைப்பது எந்த வகையில் நியாயம்?


 சங்கப் பொறுப்பாளர்களே! உறுப்பினர்களே!


45 ஆண்டுகளாக உள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் அம்மாற்றம் எதிலிருந்து தொடங்கப்பட வேண்டும். அதை தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடிய கூட்டத்தினைக் கண்டிக்கவும் 

அவர்கள் செய்கின்ற காரியங்கள் நியாயமானவை அல்ல என்பதை எடுத்துக் கூறவும் மனம் இல்லாமல் பட்டதாரி ஆசிரியர்களுக்காகப் பாடுபடுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு முன்னாள் பட்டதாரி ஆசிரியர்களை பலிகடா ஆக்க துடிப்பது ஏனோ? யாரை திருப்திப் படுத்த எங்களைப் பலிகடா ஆக்க பார்க்கிறீர்கள்?


 உண்மையில் நீங்கள் நியாயத்தின் பக்கம் இருந்தால் உங்கள் பேச்சை நம்பி பதவி உயர்வில் வந்து இதுவரை உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக உள்ளவர்களுக்கும், பட்டதாரி நிலையில் இருந்து பதவி உயர்வின் மூலம் முதுகலை ஆசிரியராகச் சென்றுள்ளவர்களுக்கும் பழைய நடைமுறைப்படியே தொடர்ந்து பதவி உயர்வு கிடைக்க வேண்டுமென குரல் கொடுக்க வேண்டும் .

இனி வருங்காலங்களில் விருப்பக் கடிதத்தை வாங்கி அதன் அடிப்படையில் செயல்படுங்கள் என்று பள்ளிக் கல்வித் துறையிடம் சொல்ல வேண்டும்.(இதைச் சொல்ல ஏன் எந்த சங்கத்திற்கும் மனச்சாட்சி இல்லாமல் போனது என்பது தெரியவில்லை.)


 சங்கங்கள் என்றால் உறுப்பினர்களுடைய சந்தேகங்களைப் போக்க வேண்டும் ?சங்கங்கள் கடந்து வந்த பாதையை உறுப்பினர்களிடம் விளக்க வேண்டும்.உறுப்பினர்களுக்கு எது சரியானது என்று ஆராய்ந்து பார்த்து அதைச் செயல்படுத்த வேண்டும்?

 பாதிப்புகள் ஏற்படும் போது அந்த பாதிப்புகளைக் கலைந்து அவர்களைக் காக்க வேண்டும்? 


பொறுப்பாளர்களே..!


பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான வழிகளை முன்னெடுங்கள்.

 உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு உடனே வந்து விடும் என்று சொல்லி அவர்களை ஒரே பணியிடத்தில் நிறுத்தி விடாதீர்கள்.


நீதிமன்ற உத்தரவை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். ஆனால் பாதிப்புக்கு உள்ளாகும் ஆசிரியப் பெருமக்களின் பாதிப்புகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதே எங்களுடைய ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது. எங்களுடைய கோரிக்கை வெற்றி பெறும் வரை தொடர்ந்து பயணிப்போம்.மனச்சாட்சி இருந்தால் எங்களுடன் கைகோத்து நில்லுங்கள்..!

மாற்றம் ஒன்றே மாறாதது;

 இதுவும் மாறும் என்ற நம்பிக்கையோடு‌...


 - அன்புடன் 


மேனாள் பட்டதாரி ஆசிரியர் ...!

தற்போது தலைமை ஆசிரியராக ..!

நாளை ???

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

குறிப்பு:

காயத்திற்கு மருந்து தேடியே இப்பதிவு.

அன்புடன்

நா.ராஜா.

💪💪💪💪💪💪👍👍👍👍👍

மாய வலையில் சிக்குண்டு கிடக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் மாய வலையில் சிக்குண்டு கிடக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் Reviewed by Rajarajan on 28.11.23 Rating: 5

கருத்துகள் இல்லை