காவலர் ஆக வேண்டும் என நினைப்பவர்களா..? இதோ ஒரு அரிய வாய்ப்பு மத்திய அரசின் SSC தேர்வு..!
26,146 மத்திய ரிசர்வ் போலீஸில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் SSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காவலர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு SSC தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மொத்தமாக 26,146 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கல்வித் தகுதி
10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது
01.01.2024 அன்று 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
குறைந்த பட்சம் 21,700 ரூபாய் முதல்-அதிக பட்சம் 69,100 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
கணினி வழி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 100 ரூபாய் இருப்பினும் SC ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
31.12.2023 அன்று
வரை விண்ணப்பிக்கலாம்.
👇👇👇
கருத்துகள் இல்லை