Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய பட்ஜெட் 2025 - 2026 முக்கிய அம்சங்கள்

மத்திய பட்ஜெட் 2025 - 2026 @ முக்கிய அம்சங்கள் :



வேளாண் துறைக்கான அறிவிப்புகள்: 

* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.



* பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.





* அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.



* பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.



* கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.



* கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.



* எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.



தொழில்முனைவோருக்கு சிறப்பு அறிவிப்பு 



* பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.



* காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.



* பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியாவை அந்தச் சந்தைக்கான சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.



* ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.



* நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.



* ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.




* அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.



மருத்துவப் படிப்பு - கூடுதல் இடங்கள்



* அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.



* அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்.



புதிய வருமான வரி சட்டம்



* புதிய வருமான வரி சட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோருக்கு உதவ பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காப்பீட்டுத் துறையில் 100% நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.



* நடுத்தர வர்க்கத்தினருக்கான ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது: பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது. புதிய வருமான வரி சலுகை மூலம் நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள்.






*ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.



* 2025-26 பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.



* 36 உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக நீக்கம்.



* காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு வரம்பு 74% ல் இருந்து 100% ஆக உயர்வு.



*புற்றுநோயாளிகளுக்காக 200 அரசு மருத்துவமனைகளில் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.



*முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமானவரி கிடையாது.




மத்திய பட்ஜெட் 2025 - 2026 முக்கிய அம்சங்கள் மத்திய பட்ஜெட் 2025 - 2026  முக்கிய அம்சங்கள் Reviewed by Rajarajan on 1.2.25 Rating: 5

கருத்துகள் இல்லை