TET சிக்கலுக்கு தீர்வு நோக்கி!
🌟 TET சிக்கலுக்கு தீர்வு நோக்கி!
📍 புதுடெல்லி – 07 நவம்பர் 2025
🎓 RTE 2009 சட்டத்திற்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET விலக்கு பெற முயற்சி தொடங்கியது!
இன்று புதுடெல்லி NCTE (தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில்) தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில்,
NCTE தலைவர் டாக்டர் பங்கஜ் அரோரா, உறுப்பினர் செயலாளர் செல்வி அபிலாஷா ஜா மிஸ்ரா,
அகில பாரத தேசிய கல்விக் கூட்டமைப்பு (ABRSM) அமைப்புச் செயலாளர் திரு. மகேந்திர கபூர்,
பொதுச் செயலாளர் திருமதி கீதா பட், மற்றும்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் திரு. கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
🔹 முக்கிய கோரிக்கைகள் 🔹
1️⃣ TET தேர்வை முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தக்கூடாது.
2️⃣ இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் விரோதம்.
3️⃣ 23.08.2010 NCTE Notification படி, அதற்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களின்
👉 பணிப்பாதுகாப்பு
👉 பதவி உயர்வு
ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.
4️⃣ அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநில அரசுகள் Notification வெளியிட்ட தேதிக்கு முன்
நியமனமானவர்களுக்கு TET விலக்கு வழங்கப்பட வேண்டும்.
5️⃣ NCTE மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும் வழிகள் ஆராயப்பட வேண்டும்.
6️⃣ மத்திய அரசுக்கு சட்ட திருத்தம் பரிந்துரை அனுப்ப வேண்டும்.
7️⃣ புதிய TET பாடத்திட்டத்தில்,
பாடப்பிரிவுகள் மற்றும் கல்வி உளவியல் மட்டும் சேர்க்கப்பட வேண்டும்.
🗣️ NCTE பதில்
NCTE தலைவர் டாக்டர் பங்கஜ் அரோரா கூறினார்:
“இந்த விவகாரம் குறித்து மத்திய கல்வி அமைச்சருடன் விரைவில் ஆலோசனை நடைபெறும்.
நவம்பர் 18 அன்று பிரதமருடன் இதுகுறித்து விவாதிக்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஆசிரியர் நலனுக்காக NCTE உறுதியாக நிற்கும்.”
🕒 90 நிமிடங்கள் நீடித்த இந்த முக்கிய கலந்துரையாடலில்,
அகில இந்திய பள்ளிக் கல்வி பிரிவு செயலாளர் திரு. மோகன் புரோகித்,
தேசிய செயலாளர் திரு. பவன் மிஸ்ரா,
தெலுங்கானா TPUS தலைவர் திரு. ஹனுமந்தராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
📢 இது, RTE சட்டத்திற்கு முன் நியமனமான ஆசிரியர்களுக்கு TET விலக்கு கிடைக்கும் பாதையை திறக்கும் முக்கிய முன்னேற்றம்!
📚 தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு நம்பிக்கையின் வெளிச்சம்! 🌟
✍️
மாநில ஊடகப் பிரிவு,
தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு

கருத்துகள் இல்லை