தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அக்.25க்குள் ஆய்வு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அக்.25க்குள் ஆய்வு!
தமிழகத்தில் 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வட்டார கல்வி அலுவலர், அவர்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் 25ம் தேதிக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொடக்க மற்றும் நடுநிலை கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் தொடக்க நிலை மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்ப்படுத்த எழுத்து, கதை கூறுதல், ஓவியம் வரைதல் ஆகியவற்றை செய்ய சொல்லி அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து 25ம் தேதிக்குள் அதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். பள்ளிகள் ஆய்வு பணிக்காக வட்டார கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் என மாவட்டத்தில் மூன்று படிநிலைகளில், ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்ட வட்டாரத்திலும் 25% பள்ளிகளை, மாவட்ட கல்வி அலுவலரும், 5 சதவீத பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலரும், 25க்குள் பார்வையிட்டு ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் பள்ளி செயல்பாடுகளுடன் கொரோனா நோய் தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அக்.25க்குள் ஆய்வு!
Reviewed by Rajarajan
on
15.10.21
Rating:
கருத்துகள் இல்லை