Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு... உயர்வு விவரம்



மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு? கணக்கீடு விவரங்கள்!
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி தொகை இன்னும் 3% அதிகரிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இதற்கான கணக்கீடு விவரங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மீண்டுமாக DA உதவித்தொகை அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) தொகை முதலில் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து வரும் நாட்களில் இந்த அகவிலைப்படி (DA) தொகை 3 சதவீதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் அகவிலைப்படி தொகை அதிகரிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

இப்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை 3% மாக உயர்த்தப்பட்ட பிறகு, ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை முதல் 28 சதவிகிதம் அகவிலைப்படியை பெறுகின்றனர். ஆனால், இந்த தொகை மேலும் 3 சதவீதம் அதிகரிக்கும்போது DA தொகை 31 சதவீதத்தை எட்டும். அதனால் மத்திய அரசு விரைவில் அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று ஊழியர் சங்கத்திலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இதனால் பணியாளர்கள் பணவீக்கத்திலிருந்து சிறிது நிவாரணம் பெறலாம். இப்போது AICPI குறியீட்டின் தரவு 121.7 ஐ எட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஜூன் 2021 க்கான அகவிலைப்படி 3% அதிகரிக்க உள்ளது. இதன் மூலம் ஜூன் 2021க்கான குறியீடு 1.1 புள்ளிகள் அதிகரித்து 121.7 ஆக எடுத்துக்கொள்ளப்படும். அந்த வகையில் ஜூன் 2021 DA கட்டணத்தை செப்டம்பர் மாத சம்பளத்துடன் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜூன் மாதத்திற்கான உதவித்தொகை அறிவிக்கப்பட்டு அவை செப்டம்பரில் செலுத்தப்பட்டால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் அரசு வழங்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், ஜூன் 2021க்கான DA உயர்வு அறிவிக்கப்பட்டால், அது ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். இந்த DA கணக்கீடு எப்போது அறிவிக்கப்படும் மற்றும் எப்போது பணம் செலுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இருந்தாலும் அதன் கணக்கீடு விவரங்கள் குறித்த விவரங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன் கீழ், ஜூன் மாதத்தில் அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால், மொத்த DA தொகை 31 சதவீதமாக மாறும். 7 வது ஊதியக் குழு மேட்ரிக்ஸ் படி, மத்திய ஊழியர்களின் நிலை -1 ன் சம்பள வரம்பு ரூ .18,000 முதல் ரூ .56,900 வரை இருக்கும். இப்போது ரூ .18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த வருடாந்திர உதவித்தொகை ரூ .66,960 ஆக இருக்கும். ஆனால் வித்தியாசத்தை கணக்கிடுகையில் ஆண்டு சம்பள உயர்வு ரூ .30,240 ஆக இருக்கும்.

கணக்கீடு விவரங்கள்:
ஊழியரின் அடிப்படை சம்பளம் – ரூ .18,000
புதிய DA தொகை – (31%) ரூ .5580/மாதம்
இதுவரை பெற்றுவரும் உதவித்தொகை (17%) – ரூ. 3060 /மாதம்
மொத்த உதவித்தொகை – ரூ .2520
ஆண்டு சம்பளத்தில் அதிகரிப்பு 2520X12 = ரூ. 30,240
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு... உயர்வு விவரம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு... உயர்வு விவரம் Reviewed by Rajarajan on 15.10.21 Rating: 5

கருத்துகள் இல்லை