ஆசிரியர் கலந்தாய்வு - 8 ஆண்டு காலம் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கட்டாய கலந்தாய்வு அரசு பரிசீலனை
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு.
கீழ்க்கண்ட விதிமுறைகள் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் உள்ளது.
1) ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரின்
பணியிடங்களும் காலிப் பணியிடமாக கருதப்படும்.
2) 8 ஆண்டு காலம் பணி முடித்தவர் கட்டாயம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.
8 ஆண்டுகள் பணி முடித்தவர் பணியிடங்கள் தானாகவே காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும்.
பணி மூப்பு (Station seneority) , கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள், சேர்க்கை, இடைநிற்றல், நல்லாசிரியர் விருது, மாற்றுத் திறனாளிகள், முதிர் கன்னிகை, விதவைகள், அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு
தர எண் நிரண்யித்து
அதனடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
1) மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, சிற்றூராட்சி பகுதிகளில் ஒரு ஆண்டு காலம் பணிபுரிந்தால் முறையே 0.5,1.0,1.5,2.0 புள்ளிகள் வழங்கப்படும். அதிகபடசமாக 16 புள்ளிகள்
2)100% சதவீதம் தேர்ச்சி எனில் 2 புள்ளிகள், >90-95% எனில் 1.5
>85-90% எனில் 1.0
>80-85% எனில் 0.5
புள்ளிகள் வழங்கப்படும்.
4)மாற்றுத் திறனாளிகள், முதிர் கன்னிகைகள், விதவைகள், நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், கணவன்/ மனைவி 30 கி. மீ தொலைவில் அரசு பணியில் இருப்பின்,
5 புள்ளிகள்.
5) 3 ஆண்டு பணி முடித்தவர்கள் மனமொத்த மாறுதலுக்கு அனுமதி
விரைவில் அரசாணைகளும்,
செயல்முறைகளும்
வெளியிட வாய்ப்பு.
கருத்துகள் இல்லை