பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை பூங்கொடுத்து கொடுத்து வரவேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் நூலகம், சத்துணவு சத்துணவு கூட, கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் ,நோட்டு புத்தகம், சீருடை, வரைபடம், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஷூ சாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் நபர்களுக்கு போட்டி தேர்வு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து உள்ளோம். அதற்கான நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம். மேலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நீக்குவதா?... இல்லையா?... என்பது குறித்து புதிய கல்வி கொள்கை சமர்பித்தப் பின்னர் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது 11 ஆம் வகுப்பு தேர்வை நீக்குவது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், திருச்சி அருகே தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த மாணவ மாணவிகளுக்கு பக்கத்தில் உள்ள பள்ளியில் பாடம் எடுக்க ஏற்பாடு செய்துள்ளோம் இதனால் அவர்களுக்கு கல்வி தடை படாது” எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை