Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TET Exam தேர்ச்சி வழக்கு குறித்து இரு அமர்வு நீதியரசர்கள் அளித்த தீர்ப்பின் விவரம்

 டெட் பற்றி இரு அமர்வு நீதியரசர்கள் அளித்த தீர்ப்பின் விவரம்.



இன்று 02.05.2023 சென்னை உயர்நீதிமன்றம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்ற வழக்கு விசாரணைக்கு வந்தது.


 இதில் மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் மற்றும் சீனியர் வழக்கறிஞர்களும் பணி மூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வாதாடினார்கள். ஆனால் தொடக்கக் கல்வி சார்பாக வாதாடுவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்பார்த்து இருந்தாலும் வழக்கு எவரும் தொடுக்கவில்லை என்பதை எண்ணி வேதனையுறுகிறோம். அதனால் தான் உயர்நிலைப் பள்ளிக்கு அளித்த தீர்ப்பில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் டெட் தேவை என பொதுவான தீர்ப்பாக அளித்து விட்டார்கள்.


 அதே சமயத்தில் 27.09.2011 முன்னர் தகுதித் தேர்வு இல்லாமல் இடைநிலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியை தொடர்வதற்கும் ஆண்டு ஊதிய உயர்வு பெறுவதற்கும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் இல்லை எனவே தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்பது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் பதவி உயர்வுக்கு சென்றாலும் தகுதி தேர்வு முடித்திருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தகுதித் தேர்வு இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. தகுதி தேர்வு கட்டாயம் என்ற நிபந்தனை இல்லை.


உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியது டெட் தீர்ப்பினை அமல்படுத்தாமல் வழக்கு தொடுத்து தடையாணை பெற வேண்டும். மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற்று தலைமை நீதிபதி தலைமையில் உள்ள அமர்வுக்கு முயற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல மூத்த வழக்கறிஞர்களிடம் சென்று ஆலோசனை கேட்டு வழக்கு தொடுக்க வேண்டும்.


பத்து நாட்களுக்குள் நல்ல முடிவினை தமிழக ஆசிரியர் கூட்டணி உட்பட அனைத்து சங்கங்களும் இணைந்து அறிவிப்பார்கள்.


உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் போல புலனப்பதிவில் அவரவர்களுக்கு தெரிந்ததை கூறி காலத்தை வீணடிக்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடராததே தான் காரணமே தவிர வேறு எவர் மீதும் பழி போட வேண்டாம். தொடக்கக் கல்வித் துறையில் வழக்கு தொடுத்திருந்தால் மாற்றம் ஏற்பட்டிருக்கும். அவரவர்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்கள் இருப்பின் அவர்கள் மூலமாவது ஆலோசனை பெறலாம்.


இயக்கம் வழிகாட்டும். வழக்கு தொடுப்பவர்கள் வழக்கறிஞர்களிடம் நேரில் சென்று ஆலோசனை பெற்று கொள்ளலாம்.


உச்ச நீதிமன்றம் சென்றாவது வழக்கில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.


வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com

மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.


அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.


க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.


தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.


தீர்ப்பின் நகல் 👇👇👇


 



TET Exam தேர்ச்சி வழக்கு குறித்து இரு அமர்வு நீதியரசர்கள் அளித்த தீர்ப்பின் விவரம் TET Exam தேர்ச்சி வழக்கு குறித்து இரு அமர்வு நீதியரசர்கள் அளித்த தீர்ப்பின் விவரம் Reviewed by Rajarajan on 2.6.23 Rating: 5

கருத்துகள் இல்லை