அரசு பள்ளிகளில்10,000 க்கும் அதிகமான காலி ஆசிரியர் பணியிடங்கள்..!
அரசு பள்ளிகளில்10,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பணிகள் பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே நடத்தி முடிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பணிகள், தற்போது வரை முடிய வில்லை.
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முழுவதுமாக முடிந்த பின்னர் தான் ஆசிரியர்கள் பணிநிரவல் முடிவடையும். இந்நிலையில், வரும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், 670 மேல்நிலைப்பள்ளிகள், 435 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இதேபோல், 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கும் நிலை உள்ளதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை