Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய ஊழியர்களுக்கு குட் நியூஸ், டிஏ ஹைக் எப்போது? வந்தது அப்டேட்

நீங்கள் ஒரு மத்திய பணியாளராக இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவரேனும் ஒருவர் மத்திய பணியாளராக இருந்தாலோ, இந்தச் செய்தி உங்களுக்கு கட்டாயம் மகிழ்ச்சியைத் தரும். ஆம், இன்று ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இன்று ஏஐசிபிஐ குறியீட்டை (AICPI - All India Consumer Price Index - Index) தொழிலாளர் அமைச்சகம் அறிவிக்க உள்ளது. இதன் அடிப்படையில், டிஏவை (அகவிலைப்படி) அரசு முடிவு செய்யும். 2023 ஆம் ஆண்டில், அகவிலைப்படி உயர்வு (DA Hike) இரண்டாவது முறையாக அரசாங்கத்தால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


தற்சமயம் 42 சதவீதம் அகவிலைப்படி பெறுகிறது

இன்று வரும் AICPI (All India Consumer Price Index) குறியீட்டு எண்களின் அடிப்படையில் அடுத்த அகவிலைப்படி முடிவு செய்யப்படும். ஆனால் தொகை எவ்வளவு இருக்கும், எப்போது அறிவிக்கப்படும்? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் செப்டம்பரில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை 1 முதல் 4 சதவீதம் அதிகரித்து 46 சதவீதம் ஆகும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. மேலும் எவ்வளவு அகவிலைப்படி (DA Hike) உயர்த்தப்பட உள்ளது என்பது இன்று மாலை உறுதி செய்யப்படும்.


அகவிலைப்படி இவ்வளவு அதிகரிக்கப்படலாம்

மத்திய ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி (Dearness Allowance) வழங்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஜனவரி முதல் மே வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஜூன் மாதத்திற்கான AICPI (All India Consumer Price Index) குறியீட்டின் தரவு இன்று வெளியாகும். இருப்பினும், தற்போது கிடைக்கும் 42 சதவீத அகவிலைப்படி, வரும் காலத்தில் 46 சதவீதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூலை 1 முதல் மத்திய ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும்.


எச்ஆர்ஏவில் (வீட்டு வாடகை கொடுப்பனவு) பம்பர் ஏற்றமும் இருக்கும்

ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், அகவிலைப்படிக்குப் பிறகு வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அதிகரிக்கும். இருப்பினும், அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும் போது வீட்டு வாடகை கொடுப்பனவு அதிகரிக்கும். இதற்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் உள்ளது. தற்போது, நகரங்களின் வகையின் அடிப்படையில் வீட்டு வாடகை கொடுப்பனவு பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு X, Y, Z என்று பெயரிடப்பட்டுள்ளது. X நகரில் வசிக்கும் மத்திய ஊழியர்களுக்கு அதிக HRA (வீட்டு வாடகை கொடுப்பனவு) கிடைக்கும். Y மற்றும் Z நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு அவர்களை விட குறைவான HRA (வீட்டு வாடகை கொடுப்பனவு) கிடைக்கும். நகரத்தைப் பொறுத்தவரை, 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் வீட்டு வாடகை கொடுப்பனவு கிடைக்கும்.


மத்திய ஊழியர்களுக்கு குட் நியூஸ், டிஏ ஹைக் எப்போது? வந்தது அப்டேட் மத்திய ஊழியர்களுக்கு குட் நியூஸ், டிஏ ஹைக் எப்போது? வந்தது அப்டேட் Reviewed by Rajarajan on 31.7.23 Rating: 5

கருத்துகள் இல்லை