நான் PO - ஆக பணியாற்றினால் செய்ய வேண்டியவைகள் பற்றி குறிப்பு
நான் PO - ஆக பணியாற்றினால்
வாக்குப் பதிவிற்கு முந்தைய நாள்
1. வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 12 .00மணிக்கு வாக்குச் சாவடிக்கு சென்று விடுவேன்.
2. வாக்குப்பதிவுக்கு தேவையான 5 Table ,4 chair ( Teacher) , Agents 10 chair தண்ணீர் வசதி உள்ளதை உறுதி செய்வேன்.
3. தேர்தல் பொருட்களை zonal officer - இடம் சரி பார்த்து பெற்றுக் கொள்வேன்.
4. VVPAT , CU, BU address Tag இன் மூலம் என் வாக்குச்சாவடிக்கு உரியதா என்பதை சரி பார்ப்பேன்.
5. வாக்காளர் வசிப்பிடம் குறித்த அறிவிப்பு பட்டியல், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வாக்குச்சாவடிக்கு வெளியில் வாக்காளர் பார்க்கும்படி ஒட்டுவேன்.
6. வாக்குச்சாவடிக்குள் Po, P-1, P-2, P-3 compartment பட்டியலை ஒட்டுவேன்.
7. Ballot unit 1 இன் wire - ஐ VVPAT உடனும், VVPAT இன் wire - ஐ Control unit உடனும் Connect பண்ணுவேன்.
8. VVPAT இன் பின்புறம் உள்ள குச்சிபோன்ற பட்டனை 1 இல் வைப்பேன். குறிப்பு: (Ballot unit ஒன்று இருப்பதால், Ballot unit இரண்டு இருந்தால் குச்சி போன்ற பட்டனை 2 - இல் )
9. VVPAT இன்பின்புறம் உள்ள knop - ஐ vertical Mood க்கு கொண்டு வருவேன்.
10. Control unit இல் உள்ள Button ஐ Press செய்வேன்.
11. VVPAT இன் drop box இல் PASS என்று 7 Paper slip கள் விழும்.
12. ஒவ்வொரு வேட்பாளரின் சின்னங்களையும் Cu Press பண்ணி B U press பண்ணி VVPAT இன் dropbox இல் paper slip களை Collect பண்ணி கொண்டு CU இன் Swith -ஐ off செய்து விடுவேன்.
13. குப்பியில் மணல் நிரப்பி indelible ink ஐ குச்சியுடன் எடுத்து வைப்பேன் குறிப்பு: காது Clean பண்ணும் buds யூஸ் பண்ணலாம்.
14. Po, P-1, P-2, P-3 அனைவரும் சேர்ந்து 17 A Register இல் வரிசை எண் voter slip இல் வரிசை எண் மற்றும் address ஐ எழுதி வைப்போம். கொடுக்கப்பட்ட Brown Sheet-ல் நமக்கு தேவையான Cover களை செய்து கொள்வோம்.
வாக்குப்பதிவு அன்று
15. Mock poll ஆரம்பிக்கும் முன்பு Declaration form part - i ,ii படிவத்தில் po, Agent sign பண்ணி Agent வசம் இந்த form ஐ ஒப்படைப்பேன். குறிப்பு: Declaration Part - i,ii இல் 17A Register, Cu, BU, VVPAT இல் எந்தப் பதிவும் இல்லை என்றும், Strip seal, Green seal இன் No po , Agent குறித்துக் கொண்டோம் என்றும் po, Agent sign பண்ணினோம் என்றும் வாக்குறுதியளித்தல்.
16. காலை5 1/2 மணியளவில் Mock poll ஆரம்பித்து விடுவேன்.
17. குறைந்தது 2 - Agent - ஆவது இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். குறிப்பு: 15 நிமிடம் Agent களுக்கு காத்திருக்கலாம்.
18. CU - ஐ Switch on செய்வேன்.
19. CU - இல் Button ஐ Press செய்வேன்.
20. Agnt களைஅவரவர் சின்னத்தில் ஓட்டளிக்க செய்வேன் (குறைந்தது 50 ஓட்டுகள்)
21. Total button ஐ Press செய்து Total ஐ Agent களுக்கு காண்பிப்பேன்
22. Close பட்டனை press செய்வேன்.
23. Result பட்டனை press செய்வேன்.
24. Clear button ஐ press செய்வேன்
25. Total button ஐ Press செய்து '0' என்பதை காண்பிப்பேன்
26. Cu ஐ off செய்து விடுவேன்.
27. VVPAT இன் Dropbox இல் உள்ள paper Slip களை Collect பண்ணி Total-ம் Slip-ம் ஒன்றாக உள்ளதா என்பதை உறுதி செய்வேன்.
28. VVPAT dropbox க்கு Seal உடன் கூடிய address Tag இடுவேன்.
29. Paper slip க்கு பின்புரம் Mock poll Slip Rubber Stamp முத்திரை பதித்து கருப்புத் தான் உறையில் போட்டு பெட்டியில் வைத்து மூடி பின்பு உறையின் மீது po, agent Sign பண்ணுவோம்
30. Green Paper Seal ஐ Cu -இல் உள்ள Inner door இல் செருகி door -ஐ Close செய்வேன்
31. Close button இல் Seal உடன் கூடிய special Tag இல் CU - இன் Sl.No எழுதி இதிலும் po, agent Sign பண்ணுவோம்
32. Result Section வெளிப்புற கதவை மூடி Address Tag போட்டு முத்திரை இடுவேன்.
33. Strip seal ABCD இல் உள்ள No po, agent குறித்துக் கொண்டு Po, agent sign பண்ணி CU - இன் Result Section இன் வெளிப்புறம் ஒட்டினேன்.
34. Mock poll Certificate. இல் po, agent sign பண்ணி Agent க்கும் (zonal officer - க்கு வாக்குப் பதிவு முடிந்த உடன் கொடுத்து விடுவேன்.)
36. சரியாக காலை 7.00 மணிக்கு உண்மையான வாக்கு பதிவை ஆரம்பித்து விடுவேன்.
37. 1 மணி நேரத்திற்கு ஒருமுறை 17 A Register - லும் , Cu இன் Total button ஐ அழுத்தி இரண்டின்
38.எண்ணிக்கையும் ஒன்றாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்வேன்.
39. Po Dairy யிலும் குறித்துக் கொள்வேன்.
வாக்குப் பதிவு முடியும் நேரம்
40. வாக்காளர் இல்லா பட்சத்தில் மாலை 6.00 மணிக்கு வாக்குப் பதிவை முடித்து விடுவேன்.
41. 6.00 மணிக்கு மேல் வரும் வாக்காளர்களுக்கு கடைசியில் நின்றிருப்பவரிலிருந்து 1, 2, 3 என்று எழுதப்பட்ட slip களை
கொடுப்பேன்
42. EDC வாக்கு இருந்தால் (வாக்குச் சாவடியில் பணிபுரிபவர்களின் வாக்கு po, p-1 , P - 2, P-3 , police) 17 A Register இல் கடைசியில் எழுதி வாக்களிப்போம்
43. வாக்குப் பதிவு முடிந்தவுடன் Cu - இல்உள்ள ரப்பர் உரையைத் திறந்து Close button ஐ Press
செய்து வாக்கு பதிவை முடிவுக்கு கொண்டு வருவேன்.
44. Total button ஐ Press செய்து Total ஐ Agent, Po -ம் பார்த்து குறித்து வைத்துக் கொள்வோம் (Cu ஐ Close செய்தாலும் Total button
மட்டும் வேளை செய்யும் மற்ற button கள் வேலை செய்யாது)
46. Cu இன் Switch ஐ off செய்வேன்
47. VVPAT இன் பின்புறம் உள்ள Knop ஐ கிடைமட்டத்திற்கு கொண்டு வருவேன்
48. VVPAT இன் Battory-யை கழற்றி விடுவேன்
49. 17 C படிவத்தில் வாக்குப்பதிவையும் EDC வாக்குப்பதிவையும் தனித்தனியாக பிரித்து Total ஐ எழுதுவேன்
50. Declaration Part -iii form ஐ fill பண்ணி po, Agent Sign பண்ணியதை Agent க்கு கொடுப்பேன்.
குறிப்பு: 17 C படிவம் கொடுத்ததற்கான Declaration.
குறிப்பு: 17 C படிவம் zonal officer க்கு 3-copies, Agent -களுக்கு தலா 1 - Copie
51. 17 A Register இல் வாக்குப் பதிவு முடித்த கடைசி பக்கத்தில் Certified that the last Serial number in 17 A Register is என்று எழுதி கடைசியாக வாக்களித்த SI.No ஐ எழுதுவேன்
52. வாக்குப் பதிவு முடிவுற்ற நேரத்தையும் . கீழ் Po, P-1, P-2, P-3, Agent sign வாங்குவேன்.
53. Cu,BU,VVPAT பெட்டியில் address tag இல் po, Agent - இன் sign போடுவோம்.
54. use பண்ணாத கவர்களில் வாக்குச்சாவடி விவரங்களை எழுதி Nil என்று எழுதினேன் குறிப்பு: Use பண்ணினாலும், use பண்னா விட்டாலும், zonal office க்கு கொடுக்கும் அனைத்து கவர்களிலும் Address எழுத வேண்டும்
zonal officer கையில் கீழ்க்கண்டவைகளை கொடுப்பேன்
55. Cu, Bu, VVPAT
56. Mock poll Certificate - 7 copie
57. 17 C Account of votes recorded - 3 copies
58. po Diary - 2 -Copies (இதில் P-1 ம் Sign பண்ண வேண்டும்)
59. Po Declaration form Part - i,ii,iii,iv
60. 16-point Report - I copie
61. Medal Seal
62. VVPAT Battory
63. Mock pollpaper slip box.
64. 17 A Register (Epic , Aadaar, பிற ஆவணங்களில் எத்தனை, எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற விபரமும் எழுத வேண்டும்) percentage-ம் எழுத வேண்டும்.
65. visit Sheet (visiters யாரும் வரவில்லை என்றால் Nil என்று எழுதி po sign பண்ண வேண்டும்)
66. Meterial list - 1
கருத்துகள் இல்லை