Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு ஊழியரின் வருமான வரி பிடித்தம் தொடர்பாக கருவூலத்துறை புதிய உத்தரவு


 

"அரசு ஊழியரின் வருமான வரி பிடித்தம் தொடர்பாக கருவூலத்துறை புதிய உத்தரவு Treasury department's new directive regarding income tax deduction of government employee"



அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு


இன்று கருவூலத்துறை ஆணையர் அவர்கள் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் நிதி ஆண்டுக்கான வருமான வரி முறையினை தேர்வு செய்ய கால நிர்ணயத்தை நீட்டிப்பு செய்துள்ளார்கள். அதன் படி
வருகின்ற ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தங்களுடைய வருமான வரி படிவம் புதிய முறையா அல்லது பழைய முறையா என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை செயல்படுத்த ஏப்ரல் ஒன்று முதல் ஏப்ரல் 15 வரை மட்டுமே இந்த அனுமதியானது இயங்கும் என்றும் மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை சம்பளப் பட்டியல் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். PAN எண் இணைக்காத அரசு ஊழியர் அவர்களுக்கு மாதச் சம்பளத்தில் 20 சதவீதம் டிடிஎஸ் எனப்படும் வருமான வரி பெறப்படும்.

வருமான வரி முறையினை பழைய வழிமுறையா அல்லது புதிய முறையா என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தவறுதலாக வருமான வரிமுறையை பதிவு செய்து இருந்தால் அதை சரி செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி முறையினை தேர்வு செய்து கொள்ள எந்த விதமான உறுதிமொழி படிவம் தர வேண்டியது இல்லை. ஆனால் ஒவ்வொரு நிதி அன்றும் டிசம்பர் மாதம் அந்த ஆண்டிற்கான சேமிப்பு வருமான வரி கழிவு போன்ற சான்றிதழ்களை ஒன்று முதல் பத்து தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.







   
அரசு ஊழியரின் வருமான வரி பிடித்தம் தொடர்பாக கருவூலத்துறை புதிய உத்தரவு அரசு ஊழியரின் வருமான வரி பிடித்தம் தொடர்பாக கருவூலத்துறை புதிய உத்தரவு Reviewed by Rajarajan on 19.3.24 Rating: 5

கருத்துகள் இல்லை