Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

2024-25ம் கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

2024-25ம் கல்வியாண்டு பள்ளிகள் ஜூன் 3ல்  திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார்.



தமிழகம் முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வு நேற்று முன் தினம் (23ம் தேதி) முடிவடைந்தது. நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. 



ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை, வெயில் போன்ற காரணங்களால் பள்ளித் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.



 இந்நிலையில் திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ளார். இந்த விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் அவர் கூறிஉள்ளார். 



இதனிடையே, தனியார் பள்ளிகளில் 1-9ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 




2024-25ம் கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு 2024-25ம் கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு Reviewed by Rajarajan on 25.4.24 Rating: 5

கருத்துகள் இல்லை