பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரி வழக்கு, தமிழக அரசு பதில் தாக்கல் செய்ய உத்தரவு
தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம்( NMOPS- TN) இன் சார்பில் நடப்பு மற்றும் எதிர்வரும் கல்வி ஆண்டுகளில் கோவை&திருப்பூர் மாவட்டங்களில் CPS திட்டத்தில் ஓய்வு பெறும்/ஓய்வு பெற உள்ள V அக்பர் அலி மற்றும் 5 ஆசிரியர் சகோதர சகோதரிகளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் மாத ஓய்வூதியம் ,GPF,பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று 29-04-2024( திங்கள் கிழமை) மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
மதிப்புமிகு நமது சீனியர் வழக்கறிஞர் திரு G சங்கரன் அவர்கள் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள CPS திட்டம் என்பது பென்சன் திட்டமே அல்ல எனவும்,20 வருடங்களுக்கு முன்னர் 01-04-2003 முதல் CPS திட்டத்தை நடைமுறைப்படுத்தி அரசாணை பிறப்பித்தாலும்,CPS திட்டத்தில் ஓய்வு பெறுகிற தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கிட எந்தவகை விதிகளும் உருவாக்கப்படவில்லை எனவும்,2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசின் பரிசீலனையில் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது, ஆகவே நடப்பு மற்றும் எதிர்வரும் கல்வி ஆண்டுகளில் ஓய்வு பெறுகிற மேற்குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் மாத ஓய்வூதியம், GPF,பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களை வழங்கிட தமிழ்நாடு அரசுக்கு மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் ,மேலும் CPS திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள பிடித்த பணம்-ACCUMULATION AMOUNT ஐ ஓய்வு பெறுபவர்களுக்கு நிபந்தனையின்றி வழங்கிட இடைக்கால உத்தரவாக மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
நமது தரப்பு வாதத்தை குறித்துக்கொண்ட மாண்புமிகு தலைமைநீதியரசர் அமர்வு தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு எதிர்வரும் 17-06-2024 அன்று மீண்டும் நமது வழக்கை விசாரணைக்கு பட்டியலிட மாண்புமிகு உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் அமர்வு உத்தரவிட்டுள்ளது என்பதனை CPS திட்டத்தில் ஓய்வு பெறும்/ஓய்வு பெற உள்ள அனைத்து ஆசிரியர்- அலுவலர் பெருமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று நமது வழக்கு மாண்புமிகு தலைமை நீதியரசர் (1st BENCH )அமர்வில் விசாரணைக்கு அனுமதிக்கப்படுவதுதான்(ADMISSION) மிக முக்கியம் என்பதால்,நமது பென்சன் வழக்கு 1ST BENCH இல் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டு விட்டது என்பதால்,எதிர்வரும் 17-06-2024 அன்று CPS AMOUNT ஐ நிபந்தனையின்றி பெறுவதற்கு உயர்நீதிமன்றம் மூலம் ஆணை பெறப்படும் என நமது மதிப்புமிகு சீனியர் வழக்கறிஞர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சட்டம் ஒரு இருட்டறை,அதில் வழக்குரைஞரின் வாதம் அகல்விளக்கு.
நல்லவர் இலட்சியம்!
வெல்வது நிச்சயம்!!
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!!
வெற்றிபெறுவோம்!!!
இவண்
மாநில மையம்
தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம்( NMOPS- TN)
கருத்துகள் இல்லை