அடுத்த தேர்தலில் இதைச் செய்தால் மட்டுமே பணி ஆணை வாங்குவது என உறுதி ஏற்போம்...
அடுத்த தேர்தலில் இதைச் செய்தால் மட்டுமே பணி ஆணை வாங்குவது என உறுதி ஏற்போம்...
1. அவரவர் ஒன்றியத்திற்குள் மட்டுமே பணி.
2. தேர்தல் பொருட்கள் மாலை 03:00 மணிக்குள் வழங்க வேண்டும்.
3. தேர்தல் பொருட்களுடன் கொசுவத்தி, டார்ச் விளக்கு, Table fan, உணவு இவற்றையும் வழங்க வேண்டும்.
4. 07:00 மணிக்கு Mock poll முடிந்து காலை 08:00 மணிக்குப் பின்னரே வாக்குப்பதிவு துவங்க வேண்டும்.
5. வாக்காளர்களுக்கு முதல் நாளே Token வழங்கி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட நேரத்தில் வாக்களிக்க வருமாறு அறிவுறுத்தல்...
6. வாக்குப்பதிவு முடிந்தவுடன் po எந்தெந்த படிவங்கள் எத்தனை நகல் வழங்க வேண்டும் என்பதை Zonal officer முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
7. வாக்குப்பதிவு இயந்திரம் எடுக்க இரவு 09:00 மணிக்கு மேல் ஆகும் போது Zonal officer கண்டிப்பாக po விடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
8. இரவு 12:00 மணி கடந்து வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்தால் அடுத்த நாளுக்கான மதிப்பூதியம் கண்டிப்பாக வழங்க வேண்டும்.
9. தேர்தல் அலுவலர்கள் வீடு திரும்ப ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும்.
10. தேர்தல் பணிக்கு வர கால நிர்ணயம் செய்யும் தேர்தல் ஆணையம் பணி விடுவிப்பு செய்யும் கால நேரத்தையும் ஆணையில் குறிப்பிட வேண்டும்.
மாற்றம் என்பது தேர்தலினால் மட்டுமே வந்துவிடாது...
தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் மாற்றம் வேண்டும்...
ஐனநாயகம் மலர அரசு ஊழியர்கள் நசுக்கப்பட்டு மனிதம் காணாமல் போய்விட்டது...
கருத்துகள் இல்லை