பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆண்டுக்கு எத்தனை நாள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் அமைச்சர் விளக்கம்
பொதுத்தேர்வு எழுத இரண்டு நாட்கள் வந்தால் போதும் என தான் சொன்ன கருத்தினை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு (156 நாட்கள்) கட்டாயம்' எனத் தெரிவித்துள்ளார்.நடப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை என்பதால் சர்ச்சை கிளம்பியது.
இது குறித்து நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதன் பின், முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர் மகேஷ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 'மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு அவர்கள் இடைநின்றதே காரணம்' என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அரசு பள்ளி மாணவர்கள், குறிப்பிட்ட நாட்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இரண்டு நாட்கள் வந்தாலும், அவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்,'' என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், இந்த கருத்தினை மறுத்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஆண்டுக்கு 3 நாட்கள் வந்தால் போதும் என வெளியான தகவல் தவறானது என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை