Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியக்கமிஷனை ரத்து செய்து புதிய பார்முலாவை அரசு அமல்படுத்த முடிவு ..!

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிக்கு ஊதியத்தில் அதிகரிப்பு தொடர்ச்சியாக தற்போது அடிப்படை சம்பளத்தில் திருத்தம் செய்வது தொடர்பான விவாதம் தொடங்கியுள்ளது. வரும் ஆண்டில் ஊதியக்கமிஷனை ரத்து செய்து புதிய பார்முலாவை அரசு அமல்படுத்த உள்ளது. இதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அரசு மாற்றக்கூடும். அதன் மாற்றத்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய ஏற்றம் ஏற்படலாம். ஃபிட்மெண்ட் ஃபாக்டரை மாற்றியமைக்க வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அடுத்த ஆண்டு அரசாங்கம் அதை மறுபரிசீலனை செய்து ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.


அரசு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை எவ்வளவு அதிகரிக்கும்


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்புக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. முதலில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்குகளில் இருந்து 3 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் சுமார் 3000 ரூபாய் உயரும். மறுபுறம், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 மடங்கு உயர்த்த வேண்டும். இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் சுமார் 8000 ரூபாய் வித்தியாசம் ஏற்படும். உண்மையில், அதன் கணக்கீடு ஊதியக் குழுவைப் பொறுத்து மாறுபடும்.


7வது சம்பள கமிஷன்: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57


ஊதியக் குழுவுக்குப் பிறகு, ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை முடிவு செய்ய ஃபிட்மென்ட் ஃபேக்டர் ஃபார்முலா ஏற்றுக்கொள்ளப்பட்டது. 6வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் விகிதம் 1.86 ஆக இருந்தது. ஆனால், 7வது ஊதியக்குழு அமலாக்கத்துடன், மத்திய அரசு ஊழியர்களின் அனைத்து ஊதியக்குழுக்களிலும் 2.57 என்ற பொதுவான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமல்படுத்தப்பட்டது. இதை ஊதியக் கமிஷனே பரிந்துரைத்தது.


7வது ஊதியக் கமிஷன்: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


உதாரணமாக ஒருவரது சம்பள கணக்கீட்டை இப்படி செய்யலாம்


அடிப்படை ஊதியம் 31.12.2022 வரை (100%) = 1.00

அகவிலைப்படி 31.12.2022 (125%)= 1.25

மொத்தம் (அடிப்படை சம்பளம்+டிஏ)= 2.25

7வது ஊதியக்குழுவில் மொத்த தொகையில் 14.29% அதிகரிக்க பரிந்துரைத்தது (அடிப்படை ஊதியம்+டிஏ)= 0.32

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் = 2.57


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் அடிப்படை சம்பளம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?


 


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால் அடிப்படை சம்பளம் எவ்வளவு இருக்கும்?


 


சம்பளம் 12,604 ரூபாய் அதிகரிக்கும்


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாறினால் அனைத்து பே-பேண்டிலும் ஊதியம் திருத்தப்படுகின்றது. அந்த நிலையில் அடிப்படை சம்பள வித்தியாசம் தெளிவாக தெரியும். மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு டேபிள்களிலும் சம்பளத்தில் எப்படி, எவ்வளவு வித்தியாசம் இருக்கும் என்று கணக்கிட்டுக் காட்டியுள்ளோம். முதல் அட்டவணையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆகும். இரண்டாவது அட்டவணையில், எதிர்பார்க்கப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பான 3.68 -க்கான கணக்கீடு உள்ளது. கிரேடு பே ரூ. 2800 என்று வைத்துக்கொண்டால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாறிய பிறகு, மொத்த ஊதியத்தில் ரூ.12,604 வித்தியாசம் இருக்கும். அதாவது ஊழியர்களின் ஊதியம் ரூ.41,804 ஆக உயரும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியக்கமிஷனை ரத்து செய்து புதிய பார்முலாவை அரசு அமல்படுத்த முடிவு ..! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியக்கமிஷனை ரத்து செய்து புதிய பார்முலாவை அரசு அமல்படுத்த முடிவு ..! Reviewed by Rajarajan on 30.3.23 Rating: 5

கருத்துகள் இல்லை