உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு தீர்ப்பு நகல்
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு
2015 ம் ஆண்டு வெளியிடப்பட்ட பேனல் ஐ எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2016 ,2017 இல் நீதிமன்ற தடை காரணமாக எந்த பதவி உயர்வும் இல்லை.
2018 முதல் 2022 வரை சுமார் 1500 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு /பணி மாறுதல் பெற்றுள்ளனர்.
இதில் சுமார் 1200 பேர் முதுகலை ஆசிரியர்கள்.
நீதி மன்ற ஆணைப்படி இவர்கள் மீண்டும் முதுகலை ஆசிரியர்களாக மாற்றப்பட வேண்டும். ஆனால் ஆணையில் நேரடியாக அந்த வார்த்தைகள் இல்லை.
61. Therefore, the writ petitions which challenge the Government
letter dated 22.12.2015 will stand allowed.
இதற்கு அர்த்தம் 2015 க்கு பிறகான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகள்/பணி மாறுதல்கள் செல்லாது.
அப்படியானால் பட்டதாரி ஆசிரியர்களாக இருந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக வந்தவர்கள்?
அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள் தகுதியற்றவர்கள்.
ஆகவே அடுத்த கட்ட நகர்வானது பள்ளிக் கல்வித் துறை இத்தீர்ப்பினை நடைமுறப்படுத்துவதில் இருக்கிறது.
கருத்துகள் இல்லை