CPS ஒழிப்பு இயக்கம் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம்....
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*CPS ஒழிப்பு இயக்கம்*
*மாநில மையம்*
*CPS இரத்து செய்திட...*
*72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம்....*
*12.09.2023 (செவ்வாய்) காலை 10 மணி முதல் 15.09.2023 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி வரை சென்னையில் சேப்பாக்கம் அரசு வளாகம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கேள்வி:*
*சிபிஎஸ் இரத்து செய்ய முடியுமா ?*
*பதில் :*
*முடியும்..!*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கேள்வி:*
*இந்தியாவில் சிபிஎஸ் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் உண்டா ?*
*பதில் :*
*உண்டு..!*
*மேற்கு வங்காளத்தில் இன்றுவரை சிபிஎஸ் திட்டம் அமல்படுத்தப்பட வில்லை..!*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கேள்வி:*
*CPS திட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க மாநிலங்களுக்கு சட்டபூர்வமான உரிமை உண்டா ?*
*பதில் :*
*சட்டபூர்வ உரிமை உண்டு..!*
*மத்திய அரசு அமல்படுத்திய சிபிஎஸ் சட்டத்தில்.....*
*சிபிஎஸ்.. ஐ அமல்படுத்துவதும்அமல்படுத்தாமல் இருப்பதும் ஒரு மாநிலத்தின் உரிமை என குறிப்பிடப்பட்டுள்ளது.*
*மாநில உரிமை என்ற அடிப்படையில் மேற்கு வங்க மாநில அரசு சிபிஎஸ் திட்டத்தை அம்மாநில அரசு ஊழியருக்கு அமல்படுத்தவில்லை..!*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கேள்வி :*
*தமிழகத்தில் அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் வித்தியாசம் உண்டா ?*
*பதில் :*
*வித்தியாசம் உண்டு.*
*மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிபிஎஸ் திட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசு அமைத்துள்ள ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன் (PFRDA ) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சிபிஎஸ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.*
*தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.*
*சிபிஎஸ் திட்டத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்கப்படுகிறது.*
*மத்தியஅரசு ஊழியர்கள் சிபிஎஸ் தொகையில் கடன் வாங்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.*
*தமிழக அரசு பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை.*
*CPS.. ஐ அமுல்படுத்திய மாநிலங்களில்...*
*PFRDA வுடன் கையெழுத்து இடாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.*
*அதனால், தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் பணிக்கொடை கிடையாது.*
*செலுத்திய தொகையில் முன்பணம் கோர முடியாது என்ற நிலைமை உள்ளது.*
*தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் சிபிஎஸ் இரத்து செய்வதற்கு மத்திய அரசு மற்றும் PFRDA விடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கேள்வி:*
*முன் தேதியிட்டு PFRDAவுடன் தமிழக அரசு கையெழுத்து இட முடியுமா?*
*பதில் :*
*வாய்ப்பே இல்லை.*
*முன்தேதியிட்டு கையெழுத்திட விரும்பினால்...*
*1.4.2003 முதல் ஊழியர்கள் செலுத்திய பங்கீடு 10 % அரசு செலுத்த வேண்டிய 10% என்று 20%*
*அதாவது Rs .70 ஆயிரம் கோடி தொகையை., தமிழக அரசு PFRDA வில் செலுத்த வேண்டும்.*
*Rs 70,000 கோடியை PFRDA வில் செலுத்த இன்றும் சரி.. எதிர்காலத்திலும் சரி.. தமிழக அரசுக்கு வாய்ப்பில்லை.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கேள்வி :*
*ஒரு வேளை தமிழக அரசு, அவ்வளவு தொகையை செலுத்த விரும்பினால்...*
*PFRDA... அந்தத் தொகையை...ஏற்றுக் கொள்ளுமா..?*
*பதில் :*
*PFRDA.. தமிழக அரசு எவ்வளவு செலுத்தினாலும், அந்தத் தொகையை ஏற்றுக் கொள்ளும்.*
*ஆனால்.. தமிழக அரசு எந்தத் தேதியில் தொகையினை செலுத்துகிறதோ..*
*அந்தத் தேதியிலிருந்து தான்.. CPS.. ஐ அமுல்படுத்த முடியும்.*
*ஏனெனில், PFRDA அத்தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து..*
*அதில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் தான் ஓய்வூதியம் வழங்கும்.*
*முன் தேதியிட்டு தொகை செலுத்தப்பட்டாலும்..*
*முன்தேதியிட்டு முதலீடு செய்ய வாய்ப்பில்லை அல்லவா..?*
*எனவே, முன் தேதியிட்டு ஓய்வூதியம் வழங்க வாய்ப்பே இல்லை.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கேள்வி:*
*PFRDA வுடன் கையெழுத்து போட இயலாத சூழ்நிலையில் தமிழக அரசுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன ?*
*பதில் :*
*1). இதே நிலையில் தொடர்வது.*
*2). CPS திட்டத்தை இரத்து செய்வது.*
*இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.*
*இதே நிலையில் தொடர்வதற்கு சட்ட ரீதியான உரிமை..அதிகாரம் அரசுக்கு இல்லை.*
*தமிழக அரசு அமுல்படுத்தி வரும் இத்திட்டமானது... "அரசியலமைப்புச் சட்டத்திற்கு " எதிரானதாகும்.*
*எனவே, CPS திட்டத்தை ரத்து செய்து விட்டு, இதுவரை அரசு ஊழியர்களிடமிருந்து இதற்கென பிடித்தம் செய்த பங்குத் தொகையினை GPF.. ல் போடுவதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை என்பதே யதார்த்தமான நிலை.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கேள்வி :*
*CPS.. ஐ ஆட்சியாளர்கள் தானாக இரத்து செய்வார்களா ?*
*பதில் :*
*தானக இரத்து செய்ய மாட்டார்கள்.*
*இரத்து செய்வதற்கான நிர்பந்தத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கேள்வி :*
*நிர்பந்தம் கொடுத்தால் CPS இரத்து செய்ய முடியுமா?*
*பதில் :*
*நிச்சயம் முடியும்..!*
*CPS.ஐ தமிழகத்தில் 2003ல் அமுல்படுத்திய பின்பு 2006 மற்றும் 2011 ல் இரண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.*
*2006 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் CPS.ஐ இரத்து செய்வோம் என திமுக மற்றும் அதிமுக தாமாக முன் வந்து வாக்குறுதி அளிக்கவில்லை.*
*2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற 10 நாள் வேலை நிறுத்தத்தின் விளைவால்...*
*2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக...*
*CPS.. ஐ இரத்து செய்வோம் என்று திமுக மற்றும் அதிமுக வாக்குறுதி அளித்தன.*
*2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நாம் போராடியதால்..*
*CPS.ஐ இரத்து செய்திட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.*
*2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு...2016 ஆம் ஆண்டைப் போல்...*
*"வேலை நிறுத்தம்" செய்தால் CPS.. ஐ நிச்சயம் இரத்து செய்ய முடியும்..!*
*வேலை நிறுத்தத்திற்கு முன் தயாரிப்பாக...*
*72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்*
*CPS இரத்து செய்திட பங்கேற்பீர்..*
*12.09.2023 முதல் சென்னையில் நடைபெற உள்ள 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில்..!*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை