முன்னேற்ற பாதையில் இந்திய பொருளாதாரம்! GDP 20.1% அதிகரிப்பு
நாட்டின் ஜிடிபி 20.1% அதிகரிப்பு – முன்னேற்ற பாதையில் இந்திய பொருளாதாரம்!
கடந்த நிதியாண்டில் இறுதியில் கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 20.1% அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி:
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக 2021-2022 நிதியாண்டில் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்த நிலைமை சீராகும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து பொருளாதாரம் சரிவடைந்துள்ளதாக நிபுணர்கள் கவலை அடைந்தனர். ரிசர்வ் வங்கி தனது அதிகாரபூர்வ அறிக்கையில், கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு முதல் அலையின் பாதிப்பை விட குறைவாகவே இருக்கும் என்று கூறியது
.
.
மேலும், நாட்டில் வேலை இழப்புகள் மற்றும் வருமான குறைவும் அதிகரித்துள்ளது. மே மாத அறிக்கைக்கு பின்னர் தொற்று பாதிப்பு குறைந்து வந்த பின்னர் வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முன்னதாக 2020-21 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா 1.6% வளர்ச்சி அடைந்துள்ள போதிலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 7.3% ஆக குறைந்திருந்தது. அந்த காலாண்டில் எரிவாயு, மின்சாரம், நீர் வழங்கல் ஆகிய துறைகள் 9.1% வளர்ச்சியடைந்தாலும், ஹோட்டல், வர்த்தகம், போக்குவரத்து ஆகிய துறைகள் 2.3% ஆக சரிவடைந்தது.
2021 – 22 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதம் வளர்ந்துள்ளது என்று தற்போது தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஓரளவு இயல்பு நிலை திரும்பியதால் உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டிருந்த வர்த்தகம், ஓட்டல்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகள், இந்தாண்டு 68.3 சதவிகிதம் வளர்ந்துள்ளது.
முன்னேற்ற பாதையில் இந்திய பொருளாதாரம்! GDP 20.1% அதிகரிப்பு
Reviewed by Rajarajan
on
1.9.21
Rating:
கருத்துகள் இல்லை