தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது..?
தமிழகம் முழுவதும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் இன்று (செப்டம்பர் 14) முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா பேரலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 லிருந்து ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வகுப்புகளை துவங்குவதில் சிக்கல்கள் உருவானது.
இதற்கு மத்தியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ள நேரடி வகுப்புகள் காரணமாக ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களது கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்புகளும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை. அதனால் தற்போதுள்ள சூழலில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு முழுவதுமாக பள்ளிகளை திறப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளை திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இன்று (செப்டம்பர் 14) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிகளை திறப்பது எடுக்கும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்டம்பர் 15 ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.
இந்த அறிக்கை மீதான ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பின் முதல்வர் முக ஸ்டாலின் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய முடிவை எடுப்பார்’ என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை பெரும்பாலும் பள்ளிகளை திறக்கும் முடிவை வலியுறுத்துவதாகவே இருக்கும் என பள்ளிகல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்புடைய அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை