மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்.12 இல் திட்டமிட்டபடி நடைபெறும் – NTA உறுதி!
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர மத்திய அரசால் நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்பதிவு கடந்த ஜூலை 13 முதல் தொடங்கியது. https://ntaneet.nic.in/ எ என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளில் மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும் இந்த ஆண்டு முதல் 200 கேள்விகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நீட் பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு வரும் செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து இந்தியாவில் தொற்று பரவல் கொரோனா இரண்டாம் தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் திட்டமிட்டபடி செப்டம்பர் 12ம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை