இந்தியாவில் 7 பகுதிகளில் மது மற்றும் மாமிசங்களை விற்பனை செய்ய தடை
மது, மாமிசம் விற்பனைக்கு தடை – முதல்வர் அதிரடி உத்தரவு!
யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவின் காரணமாக முதல்வர் யோகி உத்தரபிரதேசத்தின் மதுரா பகுதிக்கு சென்றிருந்தார். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் ஜென்ம பூமியின் கோவிலில் வழிபட்டார். அதனை தொடர்ந்து ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து விழாவினை சிறப்பித்தார். அந்த கூட்டத்தில் புதிய திட்டங்களையும் அமல்படுத்தினார்.
2017 இல் இங்குள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிருந்தாவன் மற்றும் மதுரா மாநகராட்சிகள் இணைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள ஏழு தெய்வீக தலங்கள் புனித தலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புனித தலங்களில் மது மற்றும் மாமிச விற்பனைக்கு தடை விதிக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாக அவர் கூறினார். தற்போது இந்த கோரிக்கையானது ஏற்கப்பட்டு இந்த பகுதிகளில் மது மற்றும் மாமிச விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். முதல்வரின் ஆணையின்படி மதுரா மாவட்டத்தின் மதுரா, பிருந்தாவன், கோவர்தன், நந்த்காவ்ன், பர்ஸானா, கோலம், மாஹாவன் மற்றும் பல்தேவ் ஆகிய பகுதிகளில் மது, மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவற்றை விற்பனை செய்து வந்தவர்களுக்கு வேறு வருமானத்திற்கு வகை செய்யப்படும் என முதல்வர் கூறியுள்ளார். மதுராவில் முன்பு போல் அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை