தமிழகத்தில் இனி போலி பத்திரங்கள் ரத்து – சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்!
தமிழகத்தில் போலி பத்திரங்களை ரத்து செய்யும் உரிமை தொடர்பான புதிய சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார்.
சட்ட திருத்தம்:
தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகஸ்ட் 13ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், தொடர்ந்து தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடந்து வருகின்றது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியான விவாதம் நடந்து வருகின்றது. அதன்படி, இன்று குறு – சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை,மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்டவைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.
தமிழகத்தில் சமீப காலத்தில் போலி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாமானிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பலம் பொருந்தியவர்கள் போலி பத்திரங்களின் மூலம் எளியவர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான பல இடங்களை அபகரித்து வருகின்றனர். இது தொடர்பான முறையீடுகள் பத்திரப்பதிவு துறையில் அளிக்கப்பட்டது. இதனால் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் இதற்கான சட்ட திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.
இதன் மூலம், யாரேனும் போலி பத்திரத்தை பதிவு செய்திருந்தால் அதை பத்திரப்பதிவு தலைவரே நீக்கம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றம் சென்று மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அரசின் இந்த சட்ட திருத்தினால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு பத்திரப்பதிவு துறை தொடர்பான இன்னும் சில திட்டங்களையும் அறிவித்தது.
கருத்துகள் இல்லை