தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது.. தற்போது மீண்டும் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் திரிபான “பிஏ 2” வைரஸ் தமிழகத்திலும் தொற்று பரவினால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த “பிஏ 2” வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இது ஒமைக்ரான் வைரஸை விட அதி வேகமாக பரவக்கூடியதாகவும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ் தமிழகத்தில் பரவ தொடங்கினால் மீண்டும் கடைகளின் நேர கட்டுப்பாடு மற்றும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை