Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஜாக்டோ ஜியோ ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு



ஜாக்டோ ஜியோ ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி, இன்று 8.4.23 மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவானது தலைமைச் செயலகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தையானது ஒன்றரை நேரம் நடைபெற்றது.


முன்னதாக, இன்றைய கூட்டத்திற்கு தலைமை ஏற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.‌கு. வெங்கடேசன், திரு.‌ இரா. தாஸ், திரு. கு. தியாகராஜன் ஆகியோர் மூன்று அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


மாண்புமிகு அமைச்சர்கள் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் தொடர்பான விரிவான தயாரிப்போடு கலந்து கொண்டனர்.  


ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தனர்.  


மேலும், மாண்புமிகு நிதி மற்றும் மனித வள‌ மேலாண்மை துறை அமைச்சர் அவர்களின் ஆசிரியர் அரசு ஊழியர் விரோத போக்கினையும் மாண்புமிகு அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். மாண்புமிகு நிதி மற்றும் மனித வள‌ மேலாண்மை துறை அமைச்சரின் ஊழியர் விரோத போக்கினால் ஆசிரியர் அரசு ஊழியர் மற்றும் அரசுக்கு இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லதாகத் தெரிவித்தனர்.


மேலும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தொடர்பான பணிப் பாதுகாப்பு சட்டம், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.


இப்பேச்சு வார்த்தையின் முடிவில், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதிகளின் அடிப்படையில் ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற‌ வேண்டுகோளை விடுத்தனர்.


இதன் பின்னர், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர் அரசு ஊழியர்களின் மீதுள்ள அக்கறையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததற்கும் மாண்புமிகு அமைச்சர்கள் குழு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும் நல்லெண்ண நடவடிக்கையாக ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.


மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

ஜாக்டோ ஜியோ

ஜாக்டோ ஜியோ ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு ஜாக்டோ ஜியோ ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு Reviewed by Rajarajan on 8.4.23 Rating: 5

கருத்துகள் இல்லை