உத்தரவாத பென்ஷன் திட்டம்... தமிழ்நாட்டில் நடைமுறை படுத்த திட்டம்
உத்தரவாத பென்ஷன் திட்டம்...
ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ள உத்தரவாத பென்ஷன் திட்டம் மத்திய அரசையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்தத் திட்டம் என்ன வெனில், பழைய பென்ஷனுடன் புதிய பென்ஷனையும் கலந்து, புதிய திட்டம் ஒன்றை உருவாக்குவதுதான். அதாவது, என்.பி.எஸ் திட்டத்தில் 10% சம்பளத்தைச் செலுத்தும் ஊழியருக்கு, அவர் ஓய்வு பெறும்போது கிடைக்கும் பென்ஷன் அவரது கடைசிச் சம்பளத்தில் 33 சதவிகிதமாக இருக்கும். இதே ஊழியர் தனது சம்பளத்தில் 14% தொகையை பென்ஷன் பங்களிப்பாகச் செலுத்தி வந்தால், அவருடைய பென்ஷனானது கடைசி சம்பளத்தில் 40 சதவிகிதமாக இருக்கும். இந்த பென்ஷனுக்கு அகவிலைப்படியும் உண்டு. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பென்ஷன் 7.5% உயர்த்தி வழங்கப்படும் என்பதே ஆந்திர அரசாங்கம் இப்போது அறிவித்திருக்கும் உத்தரவாத பென்ஷன் திட்டம் ஆகும்.
ஆந்திர மாநிலத்தில் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்
தற்போது மத்திய அரசு புதிய பென்ஷன் திட்டத்தை மேம்படுத்த குழு ஒன்றை அமைத்து உள்ளது. இதற்கு காலக்கெடு ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த குழுவானது மாநில அரசையும் கலந்தாலோசிக்கும் என கூறியுள்ளது. எனவே மத்திய அரசானது ஆந்திர அரசின் உத்தரவாத பென்ஷன் திட்டத்தை பின்பற்ற வாய்ப்பு உள்ளது. தமிழக அரசும் மத்திய அரசின் மேம்படுத்தப்பட்ட புதிய பென்ஷன் திட்டத்தில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி
விகடன்
கருத்துகள் இல்லை