பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் காலை மாலை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் வகுப்பு எடுக்க வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் காலை மாலை தலா ஒரு மணி நேரமும் விடுமுறை நாளில் அரை நாள் கூடுதல் வகுப்பு எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவர் நலன் கருதி ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் சிறப்பு வகுப்புகள் ஆசிரியைகளின் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப பயிற்றுவிக்கப்பட்டு வந்திருந்தது தற்சமயம் இது ஆசிரியர்களின் முழுமையான கற்பித்தல் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சிறப்பு வகுப்பு எடுக்க எந்தவிதமான அரசாணை அரசின் உத்தரவை இல்லாத நிலையில் கட்டாயமாக வகுப்பெடுக்க நிர்பந்திப்பது ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் காலை மாலை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் வகுப்பு எடுக்க வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு
Reviewed by Rajarajan
on
9.7.19
Rating:
கருத்துகள் இல்லை