Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Flash News: ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு தொடர்பாக விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்




தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு பற்றி விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்விகாரம் தொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பொது கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெறலாம் என்றும், இடமாறுதலுக்கான காரணத்தை ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் கடந்த 2016ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 2018-19ம் கல்வி ஆண்டிற்கான பொது கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை இடமாற்றம் செய்துள்ளனர். இதற்காக லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல கோடிகளை எட்டும். ஒரு மாவட்டத்தில் அதிக நாட்கள் பணியாற்றுபவர்கள்தான் இடமாறுதலுக்கு முன்னுரிமை பெற்றவர்கள். 10 ஆண்டுகளாக பிற மாவட்டங்களில் பணியாற்றி, சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் கிடைக்காமல் ஏராளமான ஆசிரியர்கள் தவிக்கிறார்கள். ஆனால் சில மாதங்கள் வெளியூரில் வேலை பார்த்துவிட்டு, லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டத்துக்கு மாறுதல் பெற்று பலர் வந்துள்ளனர். இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எந்த பலனும் இல்லை.

எனவே இந்த ஆண்டு நடந்த ஆசிரியர்களின் பொது இடமாறுதல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இவ்விகாரம் தொர்பாக, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை, ஒத்திவைக்க உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாது, கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Flash News: ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு தொடர்பாக விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Flash News: ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு தொடர்பாக விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Reviewed by Rajarajan on 26.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை