Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

விண்வெளியில் மற்றுமொரு மைல்கல் - சந்திராயன்-2 வெற்றிகரம் தனது பயணத்தை துவங்கியது Live Video - இஸ்ரோ அறிவிப்பு

chandrayaan 2




உலகில் முதல் முறையாக நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்ய சந்திராயன்-2 சேட்டிலைட் இன்று அதிகாலை விண்ணில் பயணத்தைத் தொடங்கியது. இதற்கான கவுண்டன் நேற்று காலை துவங்கியது. இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி மனிதன் வாழ்வதற்கான சாதகமான சூழ்நிலைகள் உள்ளதா தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இன்று மாலை விண்ணில் பாய்ந்தது. விண்ணில் சென்ற உடன் முதலில் புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் பின்னர்  நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு  மாறும் இறுதியாக செப்டம்பர் 6 நிலவின் தென் பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்ய உள்ளது. 

இந்த திட்டத்திற்காக இந்தியா இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. நிலவில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கும் 4வது நாடு இந்தியாவாகும். நிலவின் தென்துருவத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் குறித்து இந்த ஆராய்ச்சி நடைபெற உள்ளது. பூமியின் நீள்வட்ட பாதையில் இருந்து சந்திரனின் நீள்வட்டப்பாதைக்கு சந்திரயான் சென்றவுடன் ஆர்பிட்டர் 100 கி.மீ சுற்றுப்பாதையில் நிலவினை ஆய்வு செய்யும். லேண்டரும் ரோவரும் தான் நிலவில் தரையிறங்கும். 1471 கிலோ எடை கொண்ட லேண்டர் தன்னுடைய இடத்தில் நிலையான நின்று சந்திரனின் காலநிலையை ஆய்வு செய்யும். 6 சக்கரங்களை கொண்ட லேண்டர் நிலவில் தன்னுடைய பணிகளை மேற்கொள்ளும். ஆர்பிட்டரின் எடை 2379 கிலோ ஆகும்.  இந்த சந்திராயன் 2 அதிநவீன கேமராக்கள் எக்ஸ்ரே கருவிகள் கருவிகள் லேசர் தொழில் நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான தொழில் நுட்ப சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவில் உள்ள அம்சங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.








விண்வெளியில் மற்றுமொரு மைல்கல் - சந்திராயன்-2 வெற்றிகரம் தனது பயணத்தை துவங்கியது Live Video - இஸ்ரோ அறிவிப்பு விண்வெளியில் மற்றுமொரு மைல்கல்  -  சந்திராயன்-2 வெற்றிகரம் தனது பயணத்தை துவங்கியது Live Video -  இஸ்ரோ அறிவிப்பு Reviewed by Rajarajan on 22.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை