Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாதா பிதா குரு இவர்கள் தான் தெய்வம், ஆனால் ராட்சசி திரைப்படம் குருவின் தரம் தாழ்த்தி வாழ்த்தியது குறித்து கல்வியாளர் விமர்சனம்


பொதுபுத்தியை"ரொமாண்டிசைஸ்" செய்யும் ராட்சசிக்கு கண்டனங்கள்,..


ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி திரைப்படம் பார்த்தேன்.அரசுப்பள்ளியின் வீழ்ச்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான்  காரணம் என்று வியாக்கியானம் செய்யும் போலி முற்போக்கு வியாபாரமே ராட்சசி.



ஒரு தனியார் பள்ளியின் முதலாளியை விட ,ஒரு காவல்துறை அதிகாரியை விட அரசுப் பள்ளி ஆசிரியர் இரக்கமற்ற இழி பிறவி என்கிறார்(கவிதாபாரதி, பள்ளிக்கு  குண்டு வைக்கப் போறீகளா என தனியார் பள்ளி முதலாளியிடம் கேட்கிறார் அவர் கோபமடைந்து பிள்ளைகளின் உயிர் முக்கியமில்லையா என்கிறார்)அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலாமல் போவதற்கு ஜோதிகா வருத்தமடைகிறார் அரசுபள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கிறார் மறந்தும் கூட ஏன் தனியார் கல்வியை ஒழிக்க கூடாது என புனைவில் கூட கேட்க வலிமையற்று இருக்கிறது இந்த முற்போக்குத்தனம்ஒரு தமிழாசிரியர் மாணவர்களை இலக்கிய போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கு ஆர்வம் காட்டகாரணம் ஒருநாள் on dutyயும்,பெற்றோர் ஆசிரியர்கழக நிதியும்தான் காரணமாம் இதைவிட ஆசிரியர்களைகேவலப்படுத்த என்ன இருக்கிறது.கொஞ்சமாவது பள்ளிக்குள் வந்து கள ஆய்வு செய்து படம் எடுங்கள்.ஆசிரியர் போராட்டங்களை அரசு ஒடுக்கிய போது போராட்டத்தை என்ன சொல்லி ஒடுக்கியதோ அதையே வசனமாக வைத்திருக்கிறார் இதழாளர் பாரதி தம்பி. கல்வியின் தரம் குறித்து அரசுக்கு ஒவ்வொரு முறையும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன இவை எதுவுமே தெரியாமல் உங்கள் முற்போக்கு வேடத்திற்கு ஏன் ஆசிரியர்களை அசிங்கப்படுத்துகிறீர்கள்?



வழக்கம்போல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவில்லை என்று ஒப்பாரி வைக்கிறீர்கள் பலமுறை பேசியாகிவிட்டது இதைப்பற்றி இந்திய அரசியலமைப்பின் தனிமனித சுதந்திரம் குறித்து உங்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது ?ஒரு அரசு மருத்துவர் தன்னுடைய மகனுக்கு அரசு மருத்துவமனையில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சொல்வீர்களா? சரி உங்கள் வாதத்திற்காக நீங்கள் சொல்வது போல அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் பார்க்க வேண்டுமெனில்  அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டிய உபகரணங்கள் இல்லாமல் போனால்  ,அதனால் அவர் மகன் உயிர் போனால், அந்த உபகரணங்கள் இல்லாமையால் உ யிர் போன அரசைக் கேள்வி கேட்க வேண்டுமா?அல்லது அரசு மருத்துவர் என்பதால் உயிர் போனதற்கு நாம் தான் காரணம் என சுயவதையில்புழுங்க வேண்டுமா?



கொஞ்சம் கொஞ்சமாக கல்வித்துறையை தனியார் மயமாக்கி வரும் அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப உங்களுக்கு தைரியம் இருக்கிறதா எந்த அடிப்படையும் இல்லாமல் போகிற போக்கில் ஏன் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறீர்கள்.நேற்று வெளியான தமிழக மருத்துவ மாணவர் பட்டியலில் பத்தில் ஒன்பது பேர் cbse யில் படித்தவர்கள் ஒரு மாணவர் மட்டும் தான் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் நீட் தேர்வின் இந்த வஞ்சகம் பற்றி அரசின் இந்த செயல்பாடு பற்றி கேள்வி கேட்டு உங்களால் ஒரு வசனம் வைக்க முடியுமா?



எல்லா மனிதர்களையும் போலவே இந்த அமைப்பிற்குள்சில ஆசிரியர்களும் விதிவிலக்காக தங்கள் கடமையைசரிவர செய்யாமல் இருக்கலாம் அதை கண்டிக்க வேண்டியது மறுப்பதற்கில்லை ஆனால் இந்த அமைப்பின் சீரழிவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்பது போல படம் முழுவதும் காட்டப்படுவது எந்த வகையில் நியாயம்?எல்லாவற்றையும் விட கொடுமையானது ஒன்பதாம் வகுப்பில் சமீப காலங்களில் எந்த மாணவனையும் அரசு பள்ளிகளில் பெயில் ஆக்குவதில்லை மாறாக நீங்கள் ஒரே பள்ளியில் அதுவும் ஒரு கிராமப்புற பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் 82 பேரை பெயிலாக்குவதாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்

.



deo , ceo கையொப்பமிட்டு தயாரிக்கும் தேர்ச்சிசான்றிதழை தலைமையாசிரியர் மாற்றி அத்துணை மாணவர்களையும் பத்தாம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற வைக்கிறார் என்கிறீர்கள் சரி. அதனை தவறு என்று சொல்லி நீதித்துறை அவரை கைது செய்கிறது. அந்த மாணவர்களில் 79 பேர்  பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதைக் காரணம் காட்டி நீதிபதியே சொந்த ஜாமீனில் தலைமையாசிரியரை விடுதலை செய்கிறார் என்று படத்தை முடிக்கிறீர்கள்.ஒருவேளை நான்கு பேர்தான் தேர்ச்சி  பெற்றுஇருந்து 79 பேர் தோல்வியடைந்திருந்தால்தலைமையாசிரியரை சிறையில் அடைத்திருப்பீர்களா?இதுதான் உங்களின் ஒரு முற்போக்கா?இந்த அமைப்புகுறித்த புரிதல் இவ்வளவுதானா?



நன்றி...
கிருஷ்ணமூர்த்தி
மாதா பிதா குரு இவர்கள் தான் தெய்வம், ஆனால் ராட்சசி திரைப்படம் குருவின் தரம் தாழ்த்தி வாழ்த்தியது குறித்து கல்வியாளர் விமர்சனம் மாதா பிதா குரு இவர்கள் தான் தெய்வம், ஆனால் ராட்சசி திரைப்படம் குருவின் தரம் தாழ்த்தி வாழ்த்தியது குறித்து கல்வியாளர் விமர்சனம் Reviewed by Rajarajan on 8.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை