தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. எனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள், தேர்வுகள் என அனைத்தும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகளை திறப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகள் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டன. தமிழகத்திலும் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
இதனை கருத்தில் கொண்ட அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் அதற்கான உரிய மருத்துவ சான்றிதழ் உடன் பள்ளிக்கு நேரில் வருகை புரிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 5ம் தேதிக்குள் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.மேலும் கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை