அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை? வழங்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தின் மூலமாக இந்தாண்டு முதலே ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும், நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மேலும், மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் மட்டுமல்லாமல் அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் இலவசமாக கல்வி கற்று வருகின்றனர். எனவே, அரசு பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவது போல அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற பள்ளி மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை