ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை கிடையாது என அறிவிப்பு
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று முதல் முறையாக, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் என எதற்கும் விடுமுறை கிடையாது என்று அறிவித்து உள்ளது.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டு என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டு சுதந்திர தினம் சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்படும், தீபாவளி பண்டிகையின் போது செய்வது போல் சிறப்பு சுகாதார இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும், இதை தேசிய பொது இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் டி.எஸ்.மிஸ்ரா கூறியுள்ளார்.
மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் தொடர்புடைய இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். சுதந்திர தின வாரத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். மேலும் சுதந்திர தின விழாவை வெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மக்கள் அதில் பங்கேற்க வேண்டும். இதையடுத்து அனைத்து சமூக அமைப்புகள், பொதுப் பிரதிநிதிகள், என்சிசி மற்றும் என்எஸ்ஓ கேடட்கள், வர்த்தக அமைப்புகள் போன்ற துறைகள் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை