நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 20,528 பேர் பாதிப்பு!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வீதம் அதிகரித்த படியே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 20 ஆயிரத்து 528 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் புதிதாக 49 இறப்புகளும் பதிவாகியுள்ளது. மேலும், ஒரே நாளில் 17 ஆயிரத்து 790 பேர் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் மட்டுமே 0.32 சதவீத மக்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதாவது இந்தியாவில் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 449 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால் தடுப்பூசியை கட்டாயமாக போட்டுக் கொள்ளும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 25 லட்சத்து 59 ஆயிரத்து 840 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் தற்போது 5 சதவீத மக்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு விகிதமும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கருத்துகள் இல்லை