Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5% ஆக உயர்வு..?

 மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி பணவீக்க விகிதத்தைப் பொறுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பணவீக்கம் உயர்ந்துள்ளது. அதனால் 5% அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தகவலின் படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டால் 39 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். 


தற்போது 5 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபருக்கு 900 ரூபாய் கூடுதலாக கிடைக்கும். அதே போல அடிப்படை சம்பளம் 25,000 ரூபாய் கொண்டவர்களுக்கு 1250 ரூபாய் கிடைக்கும். மேலும் அடிப்படை சம்பளம் 50,000 பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வால் 2500 ரூபாயும் 1 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு 50,000 ரூபாயும் கூடுதலாக கிடைக்கும். அதனை தொடர்ந்து 27,000க்கு உயரும். அதனை தொடர்ந்து அடிப்படை ஊதியம் ரூ.56,900 பெறும் ஊழியருக்கு அகவிலைப்படி 39% ஆக உயர்த்தப்பட்டால் மாதம் ரூ.22,191 கூடுதலாக கிடைக்கும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.



மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5% ஆக உயர்வு..? மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5% ஆக உயர்வு..? Reviewed by Rajarajan on 6.7.22 Rating: 5

கருத்துகள் இல்லை