Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வருமான வரி கணக்கீட்டு படிவம் 16ல் Pay drawing அலுவலர்களால் சரிபார்ப்பு செய்ய வேண்டிய கடமைகள்

 


💯💥வருமான வரி கணக்கீட்டு படிவம் 16ல் Pay drawing அலுவலர்களால் சரிபார்ப்பு செய்ய வேண்டிய கடமைகள்


⭕படிவம் 16 ல் Pay drawn பக்கத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் IFHRMS ல் உள்ள Annual pay drawn ல் பக்கத்தில் உள்ளதும் ஒன்றாக இருக்க வேண்டும்.(இந்த ஆண்டில் பெறப்பட்ட சம்பளம், இதர படிகள் மற்றும் அனைத்து வகையான அரியர் தொகையை உள்ளடக்கியது.)


⭕வீட்டு வாடகை படி அனுமதிக்கும் பட்சத்தில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் அனுமதி இல்லை, ஆனால் அரசு ஊழியரின் வீடு வெளியூரில் இருப்பதால் இரண்டிற்கும் அனுமதி உண்டு.


⭕வீட்டு வாடகை படி அனுமதிக்கும் பட்சத்தில் அரசு ஊழியர் வாடகை ரசீது pan no உடன் சமர்ப்பிக்க வேண்டும். 


⭕ நிரந்தர கழிவு தொகை 50000/- கழித்து கொள்ள அனுமதி


⭕  Professional tax 2500 வரை அனுமதி


⭕ 80C VI Aல் GPF ல் உள்ளவர்கள் 150000/- கழிவு அனுமதி CPS ல் உள்ளவர்கள் 200000/- வரை அனுமதி உண்டு.


⭕Conveyance Allowance மற்றும் Hill allowance குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. 


⭕80D Insurance premium under senior citizen 25000/- மூத்த குடிமக்கள் உடன் இருந்தால் அதிக பட்சமாக 50000/- வரை அனுமதி உண்டு.


⭕  80DD ஊனத்துடன் சார்ந்திருக்கும் நபர் - குறிப்பிட்ட ஊனத்தில் குறைந்தபட்சம் 40% இருந்தால் 75000/- ஊனத்திலும் குறைந்தது 80% உடையவராக இருந்தால் 125000/- வரை அனுமதி உண்டு. ஆனால் மருத்துவச் சான்றிதழ்: பிரிவு 80DD இன் கீழ் வரி விலக்கு வேண்டுபவர்கள் மருத்துவச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். 


⭕படிவம் 10-IA: ஊனமுற்ற நபர் மன இறுக்கம், பெருமூளை வாதம் அல்லது பல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், படிவம் எண். 10-IA சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


⭕80DDB ல் கடுமையான வியாதிகளுக்கான சிகிச்சைக்கு சாதாரண குடிமகனாக இருந்தால் 40000/- வரையும் மூத்த குடிமக்களாக இருந்தால் 100000/- வரையும் அனுமதி உண்டு. மருத்துவ ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.


⭕  80Eல் உயர் கல்விக்கான வட்டி தொகை முழுவதும் கழித்து கொள்ள அனுமதி உண்டு.


⭕ 80EAல் கூடுதலாக 150000/- வரை வட்டி தொகை கழித்து கொள்ள அனுமதி உண்டு. ஆனால் நிபந்தனைகளை உள்ளடக்கியது.


⭕80Uல் ஊனமுற்ற நபர் குறைந்தபட்சம் 40% இயலாமையால் பாதிக்கப்பட்டிருந்தால், 80U இன் கீழ் வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் ரூ.75,000 வரை வரி விலக்கு கோரலாம்.

80% இயலாமையால் பாதிக்கப்பட்டிருந்தால் (ஒன்று அல்லது பல நோய்களால்) ரூ. பிரிவு 80U கீழ் 1.25 லட்சம் வரை விலக்கு கோரலாம்.


⭕89 U/Sல் கடந்த ஆண்டுகளில் பெற்ற அரியர் தொகையில் 10Eன் கீழ் விலக்கு கோரலாம். 


மேலேயுள்ள முக்கிய கழிவு சலுகைகளையும் தவிர்த்து ஏனைய பிற சலுகை இனங்கள் உள்ளன அவைகளை வருமான வரி துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் மேல் குறிப்பிட்ட இனங்களுக்கு தகுதி வாய்ந்த ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது மட்டுமே கழிவுகளை அனுமதிக்க வேண்டும். இல்லை எனில் பின்னாளில் வருமான வரித்துறை ஆட்சேபனை மற்றும் தண்டனைக்கு உரியவராக நேரிடும்.

வருமான வரி கணக்கீட்டு படிவம் 16ல் Pay drawing அலுவலர்களால் சரிபார்ப்பு செய்ய வேண்டிய கடமைகள் வருமான வரி கணக்கீட்டு படிவம் 16ல் Pay drawing அலுவலர்களால் சரிபார்ப்பு செய்ய வேண்டிய கடமைகள் Reviewed by Rajarajan on 27.2.23 Rating: 5

கருத்துகள் இல்லை