8வது ஊதியக்குழுவை அரசு விரைவில் அமைக்கப்போகிறது என ஒரு தகவல்
8வது ஊதியக்குழுவை அரசு விரைவில் அமைக்கப்போகிறது என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் மத்திய ஊழியர்களின் ஊதியம் 44 சதவீதத்துக்கும் அதிகமாக உயரக்கூடும் என தகவல் தெரிவிக்கிறது.
அதோடு பிட்மென்ட் பேக்டரை தவிர வேறு எந்த முறையிலும் சம்பளத்தை மதிப்பாய்வு செய்யலாம். பழைய 7வது ஊதியக்குழுவை விட புதிய ஆணையத்தில் நிறைய மாற்றங்கள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7வது ஊதியக்குழுவில் பிட்மென்ட் பேக்டர் 2.57 மடங்கு இருந்தது. அதன்பின் ஊழியர்களின் சம்பளமானது 14.29% உயர்த்தப்பட்டது. இந்த அதிகரிப்பு காரணமாக ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூபாய் 18 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. அதே சமயத்தில் 8-வது ஊதியக்குழுவின் கீழ் இந்த முறை பிட்மென்ட் பேக்டர் 3.68 மடங்காக உயரலாம் எனவும் அதன்பிறகு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் உயரக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. அதன்படி ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.26 ஆயிரமாக நேரடியாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை