Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்

 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இது 75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதற்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். 


இந்த பட்ஜெட்டில் 

உள்ளடக்கிய வளர்ச்சி

கடைசி மைல் அடைதல்

உள்கட்டமைப்பு முதலீடு,

திறனை அதிகரித்தல்

பசுமை வளர்ச்சி,

இளைஞர்கள்

நிதித் துறை


உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்தார்.


பட்ஜெட் சிறப்பம்சங்கள்:

புதிய திறன் இந்தியா மையங்கள்: இந்தியா முழுவதும், 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்.

சுற்றுலா தலங்கள்: சுற்றுலாவை மேம்படுத்த போட்டிகளின் அடிப்படையில் 50 சுற்றுலா தலங்கள் அமைக்கப்படும்.

கௌஷல் விகாஸ் யோஜனா 4.0: பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 ஐ அரசாங்கம் தொடங்கும்.

புதிய திறன் இந்தியா மையங்கள்: இந்தியா முழுவதும், 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்.

இணைய கோர்ட் எனும் இ-கோர்ட்டுகளின் மூன்றாம் கட்ட பணிகள் தொடங்கப்படும். இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு ஆதரவு: அடுத்த 3 ஆண்டுகளில், ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள, 10,000 உயிர் உள்ளீட்டு வள மையங்கள் அமைக்கப்படும்.

பான் அட்டை: குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும், பான் (PAN) அட்டை இனி பொதுவான அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.

2030-க்குள் 5 MMT என்ற பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை எட்ட இலக்கு. இதனை அடைவதற்கு ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு.

50 கூடுதல் விமான நிலையங்கள், நீர் ஏரோட்ரோம்கள், விமான இணைப்புக்காக தரையிறங்கும் மைதானங்கள் புதுப்பிக்கப்படும்

இந்திய ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு. இது 2013-14ல் செய்யப்பட்ட செலவீனத்தை விட 9 மடங்கு அதிக செலவாகும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக்கு ரூ.75,000 கோடி: போக்குவரத்து திட்டங்களுக்காக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு 66% அதிகரித்து 79,000 கோடி ரூபாயாக உயர்வு.

தேசிய நூலகம்: நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தரமான புத்தகங்களை வழங்குவதற்காக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

கழிவுநீர் அகற்றும் பணியில் முழுக்க 100% இயந்திரங்களை பயன்படுத்தப்படும்.

விவசாயிகள், மாநிலம் மற்றும் தொழில்துறைக்கு ரூ.2200 கோடி செலவிடப்படும். பழங்குடியின மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் 740 ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர்கள் மற்றும் துணைப் பணியாளர்களை அரசு நியமிக்கும்

சப்கா சாத் சப்கா பிரயாஸ் திட்டம் மூலம் விவசாயம், உணவு பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் திறன் மேம்படுத்த கவனம் செலுத்துகிறது.

பழங்குடியினர் குழந்தைகளின் கல்விக்காக ஏகலைவா கல்வித்திட்டம் அமைக்கப்படும்.

பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நாட்டின் முக்கிய இடங்களில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் நிறுவப்படும்.

இந்த பட்ஜெட் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, சாத்தியக்கூறுகள், பசுமை வளர்ச்சி, இளைஞர்கள் மற்றும் நிதித்துறையில் அதிக கவனம் செலுத்துகிறது.

சுற்றுலா துறையில் மேம்பாடுகள் பணி மேற்கொள்ளப்படும்,

இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மேக்ரோ பொருளாதார சூழ்நிலைகளை வலுப்படுத்துவதற்கான உத்வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட் அம்ரித் காலில் முதல் பட்ஜெட் என தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். உலக நாடுகளில் நமது இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.

ஜி-20 தலைமை இந்தியாவிற்கு மேலும் புது உலக ஒழுங்கை வலுப்படுத்த உதவும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும்.




மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் Reviewed by Rajarajan on 1.2.23 Rating: 5

கருத்துகள் இல்லை