Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம்

 ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்றும் போது, மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை, மற்றும் பள்ளிகளில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் கையால் எழுதுவதை தவிர்த்து கணினி மூலம் கண்காணிக்கும் முறை கொண்டு வரப்பட்டு கணினியில் பதிவு செய்யும் முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக பள்ளிக் கல்வித்துறையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அனைத்து பதிவுகளையும் இந்த கணினி மூலம்தான் செய்ய வேண்டும்.

இந்நிலையில், ஆசிரியர்களுக்கென தனியாக ஒரு செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

அந்த செயலிக்கு விடுப்பு நிர்வாக முறை(லீவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதன்மூலம் தங்களுக்கு தேவைப்படும் போது விடுப்புகளை செயலியில் பதிவு செய்ய வேண்டும். அப்போது அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கணினியின் மூலம் அதை சரிபார்த்து ஆசிரியர் எடுக்கும் விடுப்புக்கு ஒப்புதல் அளிப்பார்கள். இந்த செயல்முறைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் சரிபார்ப்பார்கள்.

பின்னர் இந்த விவரங்கள் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் பள்ளிகள் நிர்வாகமுறையின்கீழ் கண்காணிக்கப்படும். ஆசிரியர்கள் விடுப்புக்கான இந்த புதிய செயலி(TN-SED Schools App) மூலம் ஆசிரியர்களுக்கு மீதம் இருக்கின்ற விடுமுறை நாட்கள், எத்தனை மருத்துவ விடுப்பு நாட்கள் இருப்பு  இருக்கிறது, சாதாரண விடுப்பு நாட்கள் எத்தனை இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்களே தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலி வட்டார கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் பயன்படும். அவர்களும் இதன் மூலம் விடுப்புகளை பதிவு செய்யவும் விடுப்புக்கு ஒப்புதல் வழங்கவும் முடியும்.

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் Reviewed by Rajarajan on 6.2.23 Rating: 5

கருத்துகள் இல்லை