Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை தற்போது புதிதாக நியமிக்க இயலாது, -, பள்ளி கல்வித் துறை அமைச்சர்


பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:



காங்., -பிரின்ஸ்: அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், காலை, 7:00 மணிக்கு சென்று, இரவு, 8:00 மணிக்கு, வீடு திரும்புகின்றனர். அங்கு, அடிமைகள் போல படிக்க வைக்கப்படுகின்றனர். மாணவர்கள், கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: இப்புகார் குறித்து, துறையில் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரின்ஸ்: அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.பல பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம், நன்கொடை வசூலிக்கப்படுகிறது.

செங்கோட்டையன்: தனியார் பள்ளிகளின், கட்டணங்களை வரைமுறை செய்வதற்காக, குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின், கட்டண விபரங்கள், முன்னர், தலைமை ஆசிரியர்களின் அறைகளில் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, பெற்றோர்கள் அறியும் வகையில்,பள்ளி வளாகத்தில், கட்டண விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.



பிரின்ஸ்: ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடனடியாக, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

செங்கோட்டையன்: அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே, அதற்கு மேல், ஆசிரியர்களை நியமிக்க இயலாது.

இவ்வாறு, விவாதம் நடந்தது.
ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை தற்போது புதிதாக நியமிக்க இயலாது, -, பள்ளி கல்வித் துறை அமைச்சர் ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை தற்போது புதிதாக நியமிக்க இயலாது, -, பள்ளி கல்வித் துறை அமைச்சர் Reviewed by Rajarajan on 3.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை