அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வு எழுதி தேர்வானப் நபர் பிஇ படித்திருந்தால் அந்த வேலை வழங்கப்படவில்லை. அதை அடுத்து ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மனுவில் தனக்கு உரிய தகுதியுடைய அரசுப் பணியை வழங்கும்படி மனுதாரர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் அரசு பணிக்கு தேர்வானவர்கள் கூடுதல் கல்வி பெற்று இருந்தால் அவர்களை அதிகாரிகள் வேலை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்
.
மேலும் அவர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கு இணையான வேலைவாய்ப்பினை தேடுவதிலேயே நாட்டம் கொண்டிருப்பதால் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அரசு அலுவலகங்களில் இதுபோன்ற கல்வித் தகுதி உடையவர்கள் வேலை நேரங்களில் பணிகளை செய்யாமல் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதில்லை முக்கிய பணியாக வைத்துள்ளனர். ஆகவே இது போன்ற பணிகளில் அரசு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை மூன்று மாதங்களுக்குள் நிர்ணயம் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Reviewed by Rajarajan
on
11.7.19
Rating:
கருத்துகள் இல்லை