11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து, உண்மை இல்லை அமைச்சர் அறிவிப்பு
மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் கூட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு பாடங்களை முறையாக நடத்தாததால் தான் அதற்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கு 11ம் வகுப்பு பாடத்திட்டங்கள் முக்கியமானது. எனவே, 11ம் வகுப்பில் பொதுத்தேர்வு என்னும் நடைமுறை தொடரும். அதில் குழப்பம் தேவையில்லை" என்று தெரிவித்தார்.
11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து, உண்மை இல்லை அமைச்சர் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
15.8.22
Rating:
கருத்துகள் இல்லை